வெளிப்படுத்தின விசேஷம், அடையாளங்களின் புஸ்தகம் REVELATION, BOOK OF SYMBOLS 56-06-17 ஜபர்சன்வில், இந்தியானா, அமெரிக்கா வில்லியம் மரியன் பிரன்ஹாம் வெளிப்படுத்தின விசேஷம், அடையாளங்களின் புஸ்தகம் REVELATION, BOOK OF SYMBOLS 56-06-17 ஜபர்சன்வில், இந்தியானா, அமெரிக்கா வணக்கம், நண்பர்களே. அந்த விசிறிகள்தான் எனக்கு தடையாயிருந்தது. ஆகவே இந்த காலை வேளையில் உங்களுடன்- உங்களுடன் சிறிது நேரம் பேசும்படி இங்கே இருப்பதற்காக நாங்கள் மகிழ்கிறோம். ஞாயிறு பள்ளிக்கென்று சகோதரன் நெவில் அவர்களிடம் வேதவாக்கியங்களில் இருந்து எந்தவொரு குறிப்பிட்ட பகுதியும் இல்லையென்று நான் நினைக்கிறேன், ஆகவே நாம், பரிசுத்த ஆவியானவர் விரும்பும் எவ்விடத்திலிருந்து வேண்டுமானாலும் தொடங்குவதற்கு அல்லது எந்த அதிகாரத்தில் இருந்து நாம் படிக்க வேண்டுமென - நாம் வழி நடத்தப்படும்படி பரிசுத்த ஆவியானவரை அனுமதிக்கலாம். அப்படி செய்வது எனக்கு பிரியம், அப்படி செய்யும்போது, அதை குறித்ததான வழக்கமான நடைமுறை என்று எதுவுமிருக்காது, முறைமைகளோடு எதுவுமிருக்காது, கர்த்தரிடத் திலிருந்து வருகிற படியே அதை நாம் பெற்று, முன்னேறி செல்கிறோம். 2. நான் மிகவும் அலுவலாயிருந்தேன். கேடில் (cadle) கூடாரத்தில் நாங்கள் ஒரு அருமையான கூட்டத்தை கொண்டிருந்தோம். அதில் மிகவும் அருமையான பகுதி என்னவென்றால், என்னுடைய கருத்தின்படி, சுகமளித்தலை தவிர, கடந்த இரவில் நடந்த, அந்த பீட அழைப்பு தான், அங்கே நூற்றுக்கணக்கானோர் ஏராளமாக வந்து, பீடத்தின் எல்லா இடத்தையும் நிரப்பினார்கள், ஒவ்வொரு இருக்கைகளிலிருந்தும், மேலிருந்தும் கீழிருந்தும் பக்கவாட்டிலி ருந்தும், ஜனங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிடம் வந்துக்கொண்டிருந்தனர். அதுதான் முக்கியமான நிகழ்வு, எல்லா வற்றிற்கும் பிறகு, ஜனங்கள் மறுபடியும் பிறந்து, தேவனுடைய பிரசன்னத்திற்குள் வருவதை பார்ப்பதுதான். 3. இங்கிருக்கும் இந்த சிறிய கூட்டத்தை பாருங்கள், நம்மிடம் ஸ்தாபனம் என்றோ அல்லது அங்கத்தினன் என்றோ எதுவும் இல்லை. நாம் ஒருவரோடு ஒருவர் ஐக்கியம் கொள்கிறோம். யார் வந்தாலும், அவர்களுக்கு நாம் சுவிசேஷத்தை பிரசங்கிக்கிறோம். 4. இந்த காலை வேளையில் நான் அடையாளங் காண விரும்புகி றேன், எனக்கு மிகவும் நன்றாக தெரிந்த இரண்டு சகோதரர்கள் பின்னாக இருக்கிறார்கள், என்னுடைய இரண்டு அன்பான நண்பர்கள். கெனடாவிலிருந்து சகோதரன் சாத்மன் (Sothmann). அவரும் அவருடைய நண்பரும். அவர்கள் வடக்கிலிருந்து (up in) வந்திருக்கிறார்கள், நான் நம்புகிறேன் அவர்கள்... வியாபாரி, நீங்கள் எந்த இடத்தில் வசிக்கிறீர்கள், சகோதரனே? என்னால் நினைவுக்கூற... பின்பு உங்களுக்கு அடுத்து இருக்கும் சகோதரன். ஐயோவா (Iowa), அது சரி. அவருடைய மிட்டாயை சாப்பிட்டவாறே, சாலையில் வந்தேன். அவர் எங்கே வசிக்கிறார் என்பதை நான் அறிந்திருக்க வேண்டும், நான் அறிந்திருக்க வேண்டும் தானே? ஆகவே இன்று நம்முடைய சந்திக்கும் நண்பர்களாக (visiting friends) அவர்களை இங்கே நாம் கொண்டிருப் பதற்காக நாம் நன்றி கூறுகிறோம். இப்பொழுது அவர்கள் கெனடாவிற்கு (Canada) செல்ல, ஆயத்தமாயிருக்கிறார்கள், என்று நான் நினைக்கிறேன். 5. அதன்பின் அடுத்த கூட்டத்திற்கு வாருங்கள் அது எப்பொழு தென்றால், இந்த வாரத்தின் துவக்கத்தில், இந்த வாரத்தின் கடைசி பகுதியில், இருபத்தி மூன்றாம் தேதி மினியாபோலிசில் (Minneap olis), கிறிஸ்தவ வர்த்தக புருஷரிடத்தில். (Christian Business Men சங்கம் - ஆசி] 6. வியாழன் இரவு, சிக்காகோவில் நடக்கும், சிக்காகோ சுவிசேஷ கூடார... அது பிலதெல்பியா சபை என்று நான் நம்புகிறேன், ஆம், வியாழக்கிழமைக்கு, வருகின்ற வியாழன் இரவு சிக்காகோவில். 7. நான் நினைத்தேன், இந்த பிற்பகலில், எல்லாம் சரியாக இருந்தால், சரியாக இரண்டு மணியளவில் அந்த கூடார பிரதிஷ்டைக்காக நாங்கள் ஜூனியர் கேஷிடம் இருக்க வேண்டும். மேலும் மேலும் தன்னிடம் சில ஊமையர்கள் இருந்தார்கள் என்று அவர் கூறினார் என்று நான் நினைக்கிறேன். அதாவது, பிறக்கும்போதே ஊமையாய் பிறந்து, சுமார் இருபத்தி எட்டு வயதுடைய, ஒரு போதும் பேசவோ கேட்கவோ முடியாதிருந்த அந்த ஊமையன் இந்தியானாபோலிசில் (Indianapolis) சுகம்பெற்ற செய்தி பரவி சென்றது. எனவே இந்த பிற்பகலில் அவர்கள் அங்கே சில ஊமையர்களை அழைத்துவருகிறார்கள். இப்பொழுது அவர்களுக்காக நான் ஜெபிக்க முடியுமென்றால். அது ஒரு பழைய... இந்த ஒல்ட் ஃல் ஓல்ட் ஸ்டேட் சாலை 3-ல், சார்லஸ் டவுனிலிருந்து கொஞ் சம் அருகில். என்னால் அங்கே செல்ல கூடுமானால், 8. உடனடியாக நான் சென்று செய்யவேண்டிய சில பெரிய கடினமான காரியங்கள் இருக்கிறது. ஆகவே அதன்பின் நாளைய தின த்தில் கீழே... கீழே (தெற்குபக்கமாக - ஆசி, ஜெபர்சன்வில்லிற்கு தெற்கில் கென்டக்கி இருக்கிறது -ஆசி) கென்டக்கிக்கு ஒரு சிறு பயணமாக செல்ல வேண்டும். அது மிகவும் அலுவலாயிருக்க வைக்கிறது. ஆனால் இப்பொழுது இந்த கூட்டங்களை முடித்த பிறகு, எனக்கு சிறிது நேரமிருக்கிறது, எனக்கு சிறிது விடுமுறையிருக்கிறது. சரியாக ஆறு வாரங்களில் நான் திரும்ப வந்து விடுவேன். நான் கெனடாவிற்கு செல்கிறேன் பின்பு அங்கிருந்து மேற்கு கடற்கரைக்கு. ஆகவே எனக்காக ஜெபத்திலிருங்கள், நான் உடனடியாக செய்யவேண்டிய பல தீர்மானங்கள் இருக்கிறது, மிக மிக முக்கியமான தீர்மானங்கள், எனவே நீங்கள் எனக்காக ஜெபியுங்கள். எனக்காக நீங்கள் ஜெபிக்கும்படி நான் உங்கள் மேல் சார்ந்திருப்பேன். 9. இப்பொழுது இன்றிரவு ஆராதனைகள், நம்முடைய அன்பார் ந்த பாஸ்டர், சகோதரன் நெவில், எப்பொழுதுமே உத்வேகத்தை அளிக்கிறார். காலையில் வந்தபோது, நான் நினைத்தேன் அப்படியே உள்ளே வந்து, அமர்ந்து, அவர் பேசுவதை கேட்கலாம் என்று. ஆனால் அவர் அதிக மரியாதை தெரிந்த ஒரு மனிதன், அவர் சற்றே... அவர் மற்றவரை வேண்டுகிறார்... அவர் "முந்திக் கொள்கிறார்" (prefers). அது வேதவாக்கியம் என்று நான் நினைக்கிறேன், "ஒருவரையொருவர் முந்திக்கொள்ளுங்கள்." உங்களுக்கு புரிகிறதா. நான் - நான் அதை விரும்புகிறேன். நம்முடைய பாஸ்டர், அந்த விதமான மனிதனாக இருப்பதால், நாம் அனைவரும் நிச்சயமாக சகோதரன் நெவிலை குறித்து மகிழ்ச்சியடைகிறோம். ஒரு மனிதன் எப்படி இருக்கிறான் என்பது அவன் தன் இருதயத்தில் கொண்டிருப்பதை பொறுத்ததே. பாருங்கள்? அதாவது, மேலும் அவர் தன்னை அவ்விதமாக வெளிப்படுத்தி காண்பிக்கும்போது, அவர் யார் என்பதை அது காட்டுகிறது. 10. இப்பொழுது நான் ஒருவிதத்தில்... நல்லது, வெளிப்படையாக கூறினால், முப்பத்தைந்து நிமிடங்களுக்கு முன்புதான் மேலே வந்தேன், ஆனபடியால், எதை ஆரம்பிப்பது என்கிற குழப்பத்திலிருக்கிறேன். இங்கே வேத வாக்கியங்களிலிருந்து மூன்று இடங்களை எடுத்து வைத்திருக்கிறேன். ஒன்று முதலாம் பேதுருவிலும், மற்றொன்று யூதாவின் புஸ்தகத்திலும், இன்னொன்று வெளிப்படுத்தின விசேஷத்திலும். இப்பொழுது இந்நேரத்தில் நாம் எங்கேயிருந்து ஆரம்பிக்க போகிறோம்? கர்த்தர் இப்பொழுது நமக்கு உதவி செய்வாராக, மேலும் அவரை நாம் நோக்கி பார்க்கையில் நம்மை மிகுதியாகவும் திரளாகவும் ஆசீர்வதிப்பாராக. 11. ஆகவே, அந்த விசிறி அதிகபடியான காற்றினால் யாரையும் தொந்தரவு செய்யவில்லை என்று நான் நம்புகிறேன். அது தொந்தரவு செய்கிறதா? அல்லது, பிரசங்கப்பீடத்தில் தான் அது அதிக தொந்தரவு செய்கிறது என்று நான் நினைக்கிறேன். இங்கிருக்கும் சகோதரன் காகஸ் அவர்களே, ஆம்தானே? சரி, நல்லது, நான் நிச்சயமாக மகிழ்கிறேன். என்னுடைய தலையில் எந்தவிதமான மறைப்பும் இல்லாமல் இதோடு இருப்பது, அது- அது எனக்கு அதிக தொல்லை தருகிறது. ஒருவேளை... ஸ்திரியானவள் தலையை மூடிக்கொள்ள வேண்டும்; ஆனால் இல்லை, நான் நினைக்கிறேன். புருஷர்களுக்கோ அப்படியில்லை. தலைமுடியானது வளரும்போது, அது வெளியே வருகிறது, மேலும் அந்த துவாரங்கள் ஒருபோதும் அதற்குபின் மூடுவதே கிடையாது; வெறும் ஒரு மெல்லிய காற்று வீசினால் கூட, சிறிது நிமிடங்களில் என் தொண்டை கரகரப்பாகி விடும். ஆகவே, ஒருவிதத்தில் நான் அதை கவனிக்க வேண்டும். முதிர் வயது உங்களுக்கு ஏதோ செய்கிறது, ஆம் தானே? 12. ஓ, ஆனால், நாம் அந்த புஸ்தகத்தை முயற்சிப்போம்... இங்கே யூதாவின் புஸ்தகத்திற்குள் செல்ல முயற்சித்தால் நான் மிகவும் ஆழமாக சென்றுவிடுவேனோ என்று அஞ்சுகிறேன், ஏனெனில் அது "கோரா எதிர்த்து பேசின பாவத்தின்" பேரில், மேலும் "பிலேயாம் கூலிக்காக செய்த வஞ்சகத்திலே விரைந்தோடி, கோரா எதிர்த்து பேசின பாவத்திற்குள்ளாகி கெட்டுப்போனார்கள்" என்பதின் பேரில் இருக்கிறது. பெரும்பாலும் நமக்கு அது அதிக நேரமெடுக்கும். இந்த காலை வேளையில் இங்கிருக்கும் வியாதியஸ்தர்களுக்காக நாம் ஜெபிக்க வேண்டும். 13. நாம் வெளிப்படுத்தின விசேஷத்திற்கு திருப்பி, ஒன்று அல்லது இரண்டு வசனங்களை ஆரம்பிப்போம், சிறுவர்கள் வெளியே வரும்வரை ஒரு சிறு பின்னணியை பெற்று சிறிது நிமிடங்கள் போதிக்கலாம். அதற்கு பின்பு நாம் முடித்துவிட்டு வியாதியஸ்தர் களுக்காக ஜெபிக்கலாம். இப்பொழுது, அந்த புஸ்தகம் வேதாகமத்தில் கடைசி புஸ்தகமாயிருக்கிறது. மேலும் இங்கிருக்கும் ஒருவனாலும் முடியாது.... இந்த அதே புஸ்தகம் கூறியது: அதாவது வானத்திலாவது அல்லது பூமியிலாவது அல்லது பூமியின் கீழாவது ஒருவனும் பாத்திரவானாக இல்லை. அல்லது அந்த புஸ்தகத்தை எடுக்கவும், அதை திறக்கவும் அல்லது முத்திரைகளை உடைக்கவும் அல்லது எதைசெய்யவுமே. ஒருவனும் இல்லை, பிரதான அத்தியட்சகரோ அல்லது அவன் எவனாக இருந்தாலும்; அவன் "பாத்திரவான் இல்லை," மேலும் அதை செய்ய எந்த வழியுமே இல்லை. அப்பொழுது உலகத்தோற்றத்திற்கு முன்பாக அடிக்கப்பட்ட அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின் மேல் உட்கார்ந்த வருடைய வலதுகரத்திலிருந்து புஸ்தகத்தை எடுத்தார். (ஆங்கில வேதாகமத்தில் உள்ளபடி மொழிபெயர்ப்பு -ஆசி) மேலும், ஏனெனில் அவர் பாத்திரராயிருந்தார், அவர் அதை திறந்து முத்திரைகளை உடைத்தார். 14. ஆகவே நாம் நம்முடைய தலைகளை ஒரு நிமிடம் தாழ்த்தியி ருக்கையில், இந்த காலை வேளையில் அவர் அதை நமக்கு உடைத்து தருவாரா என்றும் மேலும் அதை திறந்து தருவாரா என்றும் நாம் அவரிடம் கேட்கலாம். 15. எங்கள் பரலோக பிதாவே, இன்றைக்கு உம்மிடம் ஜெபத்தின் வழியாக வருவதற்கான சிலாக்கியத்திற்காகவும் மேலும் நாங்கள் எதைக் கேட்டாலும் நீர் அதை கனப்படுத்துவீர் என்று நாங்கள் நம்பி விசுவாசிப்பதற்காகவும் உமக்கு நாங்கள் நன்றியுள்ளவர் களாயிருக்கிறோம். ஏனெனில், அது நாங்கள் கேட்பதால் அல்ல, ஆனால் "கேளுங்கள்; கொடுக்கப்படும். நீங்கள் பெற்றுக்கொள்ள வில்லை ஏனெனில் நீங்கள் கேட்பதில்லை. நீங்கள் கேட்பதில்லை ஏனெனில் நீங்கள் விசுவாசிப்பதில்லை" என்று நீர் கூறியதற்கு நாங்கள் கீழ்ப்படிவதால். மேலும், பிதாவே, உம்மிடம் கேட்பதற்கு நாங்கள் விரும்புகிறோம், ஏனெனில் நாங்கள் எதை கேட்டோமோ அதை நாங்கள் பெற்றுக்கொள்வோம் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். முதலாவதாக, பிதாவே, என்னுடைய சொந்த பாவங்களுக்காகவும் மற்றும் இந்த சபையாரின் பாவங்களுக்காகவும், இந்த காலை வேளையில், எல்லா கீழ்ப்படியாமையின் பாவங்களுக்காகவும், கடமையில் சோர்வாக இருந்த பாவங்களுக்காகவும் (sins of omission), மேலும் அது என்னவாக இருந்தாலும், நான் தாழ்மையாக மன்னிப்பு கேட்கிறேன். தேவனே, நீர் எங்களுடைய இருதயங்களையும் ஆத்துமாக்களையும் சரியாக இப்பொழுதே, எல்லா அக்கிரமங் களிலிருந்தும், எல்லா பாவத்திலிருந்தும், குற்றங்களிலிருந்தும் சுத்தபடுத்த வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம். மேலும் உம்மை சேவிக்கும்படியாக, பரிசுத்த ஆவியானவர் எங்களில் சரியான இருதயத்தையும் மனதையும் புதுப்பிக்கும்படி அனுமதியும். இதை அருளும், பிதாவே. வியாதியஸ்தர்களையும் வேதனைப்படுகிறவர்களையும் நீர் வார்த்தையை கொண்டு சுகமாக்கும்படி நாங்கள் ஜெபிக்கிறோம். "விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வார்த் தையை கேட்பதால் வரும்". மேலும் பரிசுத்த ஆவியானவர் இப்பொழுது உள்ளே வந்து மேலும் - மேலும் அந்த வார்த்தையை எடுத்து, அங்கிருக்கும் அந்த புதிதான, புத்துணர்ச்சியான, சுத்தமான இருதயங்களுக்குள் கொண்டு சென்று, மகத்தான விசுவாசத்தோடு அதை அங்கே விதைக்கட்டும், அது அவர்களை மேலே தூக்கட்டும், கர்த்தராகிய இயேசுவின் பிரசன்னத்தில் இருந்து தங்களுடைய சுகமளித்தளையும், தாங்கள் கேட்கும் ஆசீர்வாதங்களையும் பெறும் சாலையின் மேலே கொண்டு செல்லட்டும். ஏனெனில், உம்மிடம் வரை அவர்களை ஜெபிப்பதற்காகவும், உம்மிடம் கேட்பதற்காகவும், சுத்தம் செய்யப்படவும் மற்றும் விளக்கி சுத்தம் செய்யப்படவும், மேலும் மேலும் சுகம்பெற்று, மீண்டுமாக சேவையில் அமர்த்தப்படவும், கர்த்தாவே, நீர் எங்களை அனுப்பும் ஒவ்வொரு சிறிய மூலைமுடு க்குகளிலும் உமக்கு சேவை செய்யவுமே, அதற்காகவே நாங்கள் இங்கே வருகிறோம். இதை நாங்கள் தேவனுடைய குமாரனாகிய, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 16. வெளிப்படுத்தின விசேஷங்களின் புஸ்தகம்தான் கர்த்தராகிய இயேசுவை பற்றின கடைசி சாட்சியின் முத்திரையாயிருக்கிறது. மேலும் அது கொடுக்கப்பட்டிருக்கிறது.. நாம் அந்த முதல் அதி காரத்தில் இருந்து தொடங்கலாம். நாம் வேறு சில அடையாளங்களில் இருந்து தொடங்கலாம் என்று நான் எண்ணிக்கொண்டிருந்தேன். இப்பொழுது, அந்த முழு புஸ்தகமும் அடையாளங்களால் எழுதப்பட்டிருக்கிறது. நீங்கள் சுலபமாக சுட்டிக்காட்டி கூறுவதற்கு என்று, அதில் எதுவுமே நேரடியான வார்த்தையாக இல்லை, அது அடையாளங்களால் எழுதப்பட்டிருக்கிறது. அதை செய்வதற்கென தேவன் ஒரு விதத்தையும், மேலும் அதை செய்வதற்கான ஒரு காரணத்தையும் கொண்டிருக்கிறார். தேவன் எதை செய்தாலும் அதற்கு பின்னாக ஒரு காரணமில்லாமல் அவர் அதை செய்யமாட்டார். மேலும் யாருக்காவது... இப்பொழுது இது ஒரு பாடவகுப்பு (class), அவர் எந்த காரணத்திற்காக அதை செய்தார் என்று யாருக்காவது கருத்து இருக்கிறதா? இதுதான் காரணம், எனவே அவரால் "அதை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, கற்றுக் கொள்ளக் கூடிய பாலகர்களுக்கு வெளிப்படுத்த முடியும். "அவ்விதத்தில் நமக்கு செய்வதால், அவர் இரக்கமுள்ளவராய் இருக்கிறார் அல்லவா? 17. இப்பொழுது, படித்த மேதைகளும் அதுபோன்ற மற்றவர்களும் அவர்களுடைய பாணியில் எல்லா - எல்லா சுவிசேஷத்தையும் பெற்றிருந்தால், நாம் அதற்கு பணிந்து இருக்கவேண்டும், பின்பு அவர்கள் இங்கே வந்து எல்லாவிதமான பாரம்பரியங்களையும் மற்றவைகளையும் ஏற்படுத்துவார்கள், நமக்கு ஒரு மோசமான நேரமாயிருந்திருக்கும். அவர்கள் அதை தங்களுடைய மேதாவி பேச்சு வழக்கில் பேசியிருப்பார்கள், எதுவரையென்றால், ஏன், நம்முடைய தலைகளுக்கு மேலாக அது சென்று அதைபற்றி நாம் ஒன்றுமே அறியாத வரை. ஆனால் நம்முடைய அன்பான பரலோக பிதாவானவர், அற்பமான மேலும் படிப்பறிவு இல்லாத என்னை போன்றவர்கள் மீது, என்மீது இரக்கமாயிருந்ததற்கு, அதாவது நாம் எளிமையாக அமர்ந்து கேட்டுக்கொண்டால், அவர் தம்மையே நமக்கு வெளிப்படுத்தி தருவதாக எனக்கும் உங்களுக்கும் வாக்குத்தத்தம் பண்ணி யிருப்பதால் நாம் மிகவும் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். அது அதிசயமாக இல்லையா? நம்முடைய எல்லா கோட்பாடுகளும், நம்முடைய எல்லா உணர்ச்சிவசங்களும் மேலும் நாம் பெற்றுள்ள ஒவ்வொன்றும், அவையெல்லாம் கூட சேர்க்கபட்டவைகளே. 18. எந்த மனுஷனும் கிறிஸ்துவை அறிந்துகொள்ள வேண்டுமானால் செய்ய வேண்டிய காரியம் ஒன்றே ஒன்றுதான் உண்டு, "உன் முழு இருதயத்தோடும் கர்த்தராகிய இயேசுவை விசுவாசி, நீ இரட்சிக்கப்படுவாய்." ஆகவே இப்பொழுது வித்தியாசமான ஞானஸ்நானங்கள் நம்மிடம் இருக்கிறது, பல்வேறுப்பட்ட கோட்பாடுகள் நம்மிடம் இருக்கிறது, மேலும் நாம் செய்யும் காரியங்களிலும், நாம் அமைக்கும் சிறிய காரியங்களிலும் வித்தியாசங்கள் உண்டு. ஆனால் அவையெல்லாம் மனிதனால் உண்டாக்கப்பட்டவை. நாம் இதை ஓரிடத்தில் எடுத்தோம். அதிலிருந்து ஒரு பிரச்சனை, மேலும் இங்கிருந்து, ஒரு சிறு பிரச்சனை செய்தோம். பிரஸ்பிடேரியன்கள், எவான்ஜி லிக்கல்ஸ், பண்டமெண்டல்ஸ் (Fundamentals ஸ்தாபனத்தின் பெயர் ஆசி) மற்றும் அது போன்றவர்கள், மேலும் பெந்தெகொஸ்தேயினர். ஹோலினஸ், கால்வினிஸ்ட் அவர்கள் எல்லாரிடமும் கொஞ்சம் கோட்பாட்டு விளக்கங்கள் (theories) இருக்கின்றன, அவைகளை வைத்து அவர்கள் உபதேசங்களை ஏற்படுத்தும்போது, அவைகள் அவர்களை வழிநடத்துகிறன. நிஜமாகவே, ஒரே ஒரு காரியம் என்னவென்றால், "கர்த்தராகிய இயேசுவை விசுவாசி" "வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள், என்னைக்குறித்துச் சாட்சிக்கொடுக்கிறவைகளும் அவைகளே" என்று இயேசு கூறினார். 19. இப்பொழுது, அது எவ்வளவு எளிமையாயிருக்கிறது, அப்படி யானால், எந்த மனுஷனும் எவ்வளவு-எவ்வளவு எழுதபடிக்க (அதாவது, "கல்வியறிவு") தெரியாதவனாயிருந்தாலும், அவர்கள் ஒரு பிரதான பேராயரை போன்றே பரிசுத்தமாகவும் தெய்வீகமாகவும் இருக்க முடியும். பாருங்கள்? அது அற்புதமல்லவா? நீங்கள் எவ்வளவாக மனம் தளர்ந்து இருந்தாலும், நீங்கள் ஒரு- ஒரு அதிபதியாக இருந்தாலும் அல்லது நீங்கள் தெருவில் நடக்கும் விபச்சாரியாக இருந்தாலும், ஒரேவிதமாகவே தேவன் நேசிக்கிறார், ஒரு அதிபதிக்காக மரித்தது போலவே ஒரு விபச்சாரிக்காகவும் மரித்தார். பாருங்கள்? ஆம். நீங்கள் அந்த காரியங்களை பற்றி சிந்திக்க ஆரம்பிக்கும்போது, அப்பொழுது அது - அது ஒவ்வொன்றையும் மாற்றுகிறது. அது மாற்றுமல்லவா? முழு மனதின் மனோபாங்கையும் (attitude) மாற்றுகிறது. தேவனை பற்றின உங்கள் கருத்தை மாற்றுகிறது. 20. சில சமயங்களில், இங்கே, தெரிந்துக்கொள்ளுதலின் பேரில் சார்ந்திருந்தேன். அந்த காரணத்தால்தான் இந்த காலை வேளையில் பேதுருவில் இருந்து மனதை ஏனெனில் கடந்த சில தருணங்களில் நான் இங்கே தெரிந்துக் மனதை மாற்றிக்கொண்டேன், கொள்ளுதலை பற்றி மிக கடினமாக பேசினேன், கொஞ்சம் அதிலிருந்து தூரமாக இருக்கலாம் என்று எண்ணினேன், 'ஏனெனில் நீங்கள் நினைக்கக்கூடும்...நான் எதற்காகவும் வித்துக்களிடம் செல்ல விரும்பவில்லை. ஆனால், இந்த இடத்தை பற்றி நான் சிந்தித்த காரியம் என்னவென்றால், யாரோ ஒருவர் கூறினார். "சகோதரன் பிரான்ஹாமே, தேவன், தெரிந்துகொள்ளுதல், ஆம், அவர் தெரிந்துக்கொள்ளுதலுக்கு அழைத்திருந்தால், நல்லது, அப்படியானால், என்னே, நான் விரும்பும் எதை வேண்டுமானாலும் செய்யலாமே. "நல்லது, அது நீங்கள் தெரிந்துகொள்ளுதலில் இல்லை என்பதையே காட்டுகிறது. ஆம். அது உண்மை. பாருங்கள்? 21. ஏனெனில், நீ நேசிக்கப்படவே தகுதியற்றவனாய் இருந்த போது அவர் உன்னை மிக அதிகமாக நேசித்தார், நீ அதைப்பற்றி எதையும் செய்வதற்கு முன்னமே, அவர் உன்னை தெரிந்துகொண்டார், இதை -இதை பற்றி சிந்திக்கும்போது நீ அவரை மிக அதிகமாக நேசிப்பாய். அதுபோன்ற ஒன்றை உன்னால் எப்படி மறுக்க முடியும்? ஏன், என்னை பொறுத்தவரை அது வைக்கிறது அதாவது தெரிந்துகொள்ளுதலை நியாயபிரமாணத்தை விட மிக மிக அதிக உயரத்தில் வைக்கிறது. அது வைக்கிறது, அல்லது அது வைக்கிறது... அது லிகலிஸ்ட்டின் (legalist) எண்ணத்தை விட ஏன், நான் நேசிக்கப்படவே தகுதியற்றவனாய் இருந்தபோது, அவர் என்னை நேசித்தார் என்பதை பற்றி சிந்திக்கும்போது, அது எல்லாவற்றை விடவும் மேலானது. அதை பற்றி என்னால் ஒன்றுமே செய்யமுடியாமல் இருந்தபோது, அவருடைய கிருபையால் அவர் என்னை தூக்கியெடுத்து என்னை இரட்சித்தார். நிச்சயமா கவே அவருக்கு சேவை செய்யவும் அவரை நேசிக்கவும் நான் நன்றியுள்ளவனாயிருக்கவேண்டும். பாருங்கள்? ஆகவே நாம் ஆசீர்வாதங்களை எண்ணும்போது அவரை பற்றி நாம் அப்படி தான் உணருகிறோம். 22. மேலும் சிந்தித்துப்பாருங்கள், "இப்பொழுது, யாரெல்லாம் ஒரு - ஒரு உயர்கல்வி (diploma) பெற்றிருக்கிறார்களோ அல்லது கல்லூரியில் இரண்டு பட்டமாவது பெற்றிருக்கிறார்களோ அவர்கள் மட்டுமே என் சீஷராயிருக்க முடியும்" என்று தேவன் கூறியிருந்தால்? நல்லது, அற்பமான, எழுதபடிக்க தெரியாத ஜனங்களாகிய நாம் என்ன செய்திருப்போம்? அல்லது, என்னுடைய, "நாம்" என்று நான் சொல்லும்போது என்னுடனே பேசுகிறேன். "என்னுடைய" என்று சொல்லும்போது நான் என்னையும் என் குடும்பத்தையும் குறிப்பிடுகிறேன், பாருங்கள். எங்களால் என்ன செய்ய முடியும்? எங்களில் யாரேனும் என்ன செய்ய முடியும்? பரிதாபமான எளிய வீட்டிலிருக்கும் பெண்கள் (Housewives) என்ன செய்வார்கள்? அவர் இப்படி கூறியிருந்தால், "வெறும் குருமார்கள் மட்டுமே இரட்சிக்கப்படுவார்கள், ஊழியர்கள் மட்டுமே, அவ்வளவுதான். மற்றவர்கள்... அவர் ஒரு உதாரணத்தை ஏற்படுத்தி அந்த ஜனங்களை அறைகுறையாக ஜீவிக்க முயற்சிக்க வைப்பார் சரிதானே"? பரிதாபமானவர்களாகிய நீங்கள், எளிய வீட்டு பெண்கள் (housewives) மற்றும் நீங்கள் எல்லாம் என்ன செய்வீர்கள்? நீங்கள் இழக்கப்பட்டுவிடுவீர்கள். "வெள்ளைநிற இனம் மட்டுமே இரட்சிக்கப்படும், அவ்வளவுதான்; கருப்பினத்தவர்கள், பழுப்பினத்தவர்கள் (Brown race), மஞ்சள்நிற இனம். உங்களில் யாருக்கும் அதைபற்றி செய்ய எதுவும் இல்லை என்று அவர் கூறியிருந்தால், நீங்கள் யாவரும் இழக்கப்பட்டிருக்கிறீர்கள் தானே"? அது பயங்கரமாயிருக்கும் அல்லவா? 23. "விருப்பமுள்ள எவனும், அவன் வரக்கடவன்" என்று அவர் கூறியதால் நான் மிகவும் மகிழ்கிறேன். அதாவது, இளைஞனாயிருந்தாலும், வயதானவராயிருந்தாலும், சிறியவனா யிருந்தாலும், கருப்போ, வெள்ளையோ, பழுப்போ எப்படியி ருந்தாலும், வெறுமனே வந்து, கர்த்தருடைய ஊற்றுகளிலிருந்து இலவசமாக பருகலாம். அதற்காக ஒன்றையும் செலவு பண்ண தேவையில்லை, ஒன்றையுமே. மேலும், நினைவில் கொள்ளுங்கள், அழைப்பிதழ் கொடுக்கப்பட்ட பிறகு, அவர் உங்களை அழைத்து உங்களை தெரிந்துகொள்ளும் வரை உங்களால் வர முடியாது. அது உண்மை. "எந்த மனுஷனாலும் முடியாது. "அவர் இங்கே கூறுகிறார், "ஒவ்வொருவருக்குமே அந்த ஊற்று இலவசம், மேலும் பிதா ஒருவனை முதலில் அழைக்காவிட்டால் எந்த மனுஷனும் வரமாட்டான். " 24. அப்படியானால் ஒரு, [சகோதரன் பிரன்ஹாம் பிரசங்க பீடத்தை நான்கு முறை தட்டுகிறார் - ஆசி] ஒரு தட்டுதல் வந்து, "நீங்கள் வரும்படி நான் உங்களை அழைக்கிறேன், பிள்ளைகளே, என்னோடுகூட போஜனம் பண்ணுங்கள், வாருங்கள்" என்று கூறுமானால், அதை எப்படி உங்களால் மறுக்க முடியும்? அதுபோன்ற ஒரு அழைப்பை மறுப்பது என்பது அது பார்ப்பதற்கு, என்னை பொறுத்தவரை அது ஒரு மன நல குறைபாடே (Mental Deficiency), பின்பு அந்த பாசமிக்க பரலோக பிதா... இங்குமட்டும் ஐக்கியம் கொள்வதற்காக அல்ல, ஆனால் என்றெ ன்றைக்கும் இரட்சிக்கப் படும்படியாய், அவருடைய நன்மைகளில், அவருடைய இரக்கங்களின் நன்மைகளில், மேலும் அவருடைய மகிமையில் ஜீவிக்கும் படியாய். மேலும் இந்த பழைய மாம்ச சிந்தையை ஒரு கலங்கமற்ற, பரிசுத்தமான, பரிசுத்தமாக்கப்பட்ட ஒன்றுடன் இடம் மாற்றிக்கொள்ளும்படியாய்! மேலும் இந்த பழைய, பெலவீனமான சுருங்கி போய்கொண்டிருக்கும் சரீரத்தை இடமாற்றிக் கொள்ள, ஒருபோதும் ஒழிந்துபோகாத அழிவில்லாத ஒன்றுடன் இடமாற்றிக்கொள்ள! மேலும் ஒழிந்து போகாத ஒரு கிரீடத்தை பெற்றுக்கொள்ள! மேலும் மரணத்திற்கு பதிலாக ஜீவனை இடமாற்றிக்கொள்ள! மேலும் நரகத்திற்கு பதிலாக பரலோகத்தை இடமாற்றிக்கொள்ள! முக வாடலுக்கு பதிலாக சந்தோஷத்தை இடமாற்றிக்கொள்ள, ஒ, என்னே, உங்களை "வா" என்று அழைக்கிறார்!. உங்களால் எப்படி அதை மறுக்க முடியும்? பாருங்கள்? எப்படி உங்களால் அதை கீழே போட முடியும்? அது - அது அதை நிராகரிப்பேன் என்று எண்ணும் எண்ணமே பயங்கரமானது. ஆம்தானே? 25. மேலும், ஒ, என்னே, தேவன் தம்முடைய பிள்ளைகளை சுகமாக்குவதை நிச்சயமாகவே நான் காண விரும்புகிறேன். என்னை தவறாக புரிந்துகொள்ளாதீர்கள். ஆனால் ஒரு விஷயத்தை நான் கவனித்து வருகிறேன். சமீப காலமாக நீங்கள் கவனித்தால், எனக்கு ஒரு அழைப்பு கிடைக்கும்போது, நான் செல்லும் ஒவ்வொரு இடங்களிலும், இன்னும் கொஞ்சம் அதிகமாக பிரசங்கிக்கவே நான் முயற்சித்து வருகிறேன். நான் என்னுடைய பிரசங்கத்தை குறைத்துக் கொண்டேன், அபிஷேகத்தி லும் நித்திய பாகத்தில் வேலை செய்வதிலேயே மிக அதிகமாக சிரத்தை செலுத்திவருகிறேன்.... இயற்கைக்கு மேம்பட்டதில், பெரிதளவில், அதாவது, எப்பொழுதும், தரிசனங்களை காண் பதில். அவையெல்லாம் அற்புதமான வைகள்தான், அதற்காக நான் தேவனுக்கு நன்றி கூறுகிறேன், ஆனால் அதைக்காட்டிலும் வார்த்தையை பிரசங்கிப்பது பத்து லட்சம் மைல்கள் மேலானது. முடமானவர்கள் நடப்பதையும், குருடர்கள் பார்ப்பதையும் நான் காணும்போது... 26. அன்றொரு இரவில், அந்த முடக்குவாதத்தால் செயலிழந்து அமர்ந்திருந்த அந்த சீமாட்டி, அவள் அமர்ந்திருந்த அந்த இருக் கையில் மரித்துக்கொண்டிருந்தாள். மேலும் கர்த்தராகிய இயேசு, தன்னுடைய இரக்கத்தால், அவள் மீது ஒரு தரிசனத்தை காண்பித்து, அவளை அந்த நாற்காலியிலிருந்து வெளியே அழைத்தார். அவளுடைய மருத்துவர் என்னிடம் என்னுடைய அறைக்கு வந்து, "சங்கை பிரன்ஹாம் அவர்களே, நான் உங்களிடம் கேட்க வேண்டும், நீங்கள் என்ன செய்தீர்கள்?" என்றார். 27. "ஒன்றும் செய்யவில்லை. அது கர்த்தராகிய இயேசுவில் இருக்கும் அவளுடைய விசுவாசமே அதை செய்தது" என்று நான் கூறினேன். 28. இப்பொழுது நாம் அனைவருமே அதை நேசிக்கிறோம்! செவிடும் ஊமையும், ஒருபோதும் பேச முடியாத அல்லது கேட்க முடியாத உலகில் பிறந்து செவிடாகவும், ஊமையாகவும் இருப்பவர், அங்கே ஒரு சிலை போன்று அமர்ந்திருப்பார், அதன்பின் அந்த நபரால் எழுந்து உரையாட முடிவதையும் கேட்க முடிவதையும் நாம் கேள்விப்படும்போதும் மேலும் அதை காணும்போதும் நாம் எப்படியாய் அதை நேசிக்கிறோம். அது அற்புதமானது! ஆனால், ஒ. ஒரு இழக்கப்பட்ட ஆத்துமா அழுதவாறே "தேவனே, ஒரு பாவியாகிய என் மீது இரக்கமாயிரும்" என்று கூறியபடி பீடத்தை நோக்கி முன்னோக்கி வருவதை காண்பதை காட்டிலும் வேறெதுவும் இல்லை, அந்த ஊமையாயிருப்பவர் மறுபடியும் மரித்துவிடுவார், அந்த செயல் இழந்த நிலையில் இருப்பவர் மறுபடியும் மரித்துவிடுவார், எல்லா வியாதியஸ்தரும் மறுபடியும் வியாதிப்பட்டு மரித்துவிடுவார்கள். ஆனால் இரட்சிக்கப்பட்ட அந்த ஆத்துமாவோ, என்றென்றைக்குமாய் ஒருக்காலும் கெட்டு போகாமல் அது நித்தியமாக இரட்சிக்கப்பட்டிருக்கிறது. "என் வசனங்களை கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக் கிறவனுக்கு, என்றென்றும் நிலைத்திருக்கிற, நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட் பட்டிருக்கிறான். ஏனெனில், அவர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தார்கள். ஆமென். அவ்வளவு அற்புதமா? 29. ஒ, அது உலகம் முழுவதும் பரவிச்செல்லும் அன்பின் விளைவை (reaction of love) ஏற்படுத்த வேண்டும். சுவிசேஷமானது உலகம் முழுவதும் செல்லவேண்டும் என்பதைத்தான் இயேசுவும் எண்ணினார். அது மனித இருதயத்தில் சங்கிலி பிணைப்பாகி, ஜனங்கள் இரட்சிகப்படும்வரை அவர்களால் இரவும் பகலும் தூங்க முடியாமல் செய்யவேண்டும். 30. பவுலை பாருங்கள், அவன், "கர்த்தராகிய இயேசுவின் ஒரு சிறைகைதி" என்று கூறினான், புறஜாதிகளிடத்தில் அனுப்பப்பட்ட ஒரு யூதன். அவன் புறஜாதிகளிடமாய் திரும்பியவுடனே அவனுடைய ஜனங்கள் அவனை தங்களுடைய கூட்டத்தில் இருந்து நீக்கினார்கள் (Excommunicated). பாருங்கள்? ஆனால் அவனோ கர்த்தராகிய இயேசுவின் சிறைகைதி ஆனான். 31. ஆப்பிரிக்காவில் நடப்பது போன்று. அங்கிருக்கும் அந்த அந்த கறுப்பின மனிதனை வெள்ளையன் மிகவும் இழிவுப்படுத்துவான், எதுவரையென்றால், நீங்கள் பழகுவதை (associating) பார்த்துவிட்டால் கூட "ஓ, என்னே, எவ்வளவு பயங்கரம்" என்பான், பாருங்கள், அவர்களை எல்லாவிதமான பெயர்களை கொண்டும் அழைப்பது, அவர்களில் பலர், அவர்களுக்கு ஆத்துமா இருக்கிறது என்பதை கூட நம்புவதில்லை. ஆனால் அதன்பின்னர் ஒரு வெள்ளையன் அழைக்கப்படும்போது, பவுலை போன்ற ஒரு மனிதன், அந்த மனிதனின் இரட்சிப்புகாக அழைக்கப்படுவது என்பது ஆச்சரியம். அமெரிக்காவிலும் மற்றும் பல நாடுகளிலும் அவ்வாறு இல்லாததால் தேவனுக்கு நன்றி, ஆனால் நான் அதில் இருந்திருக்கிறேன். ஒருவேளை மஞ்சள் நிற மனிதனிடம் அனுப்பப்படலாம், "எல்லாரிடமும் செல்லுங்கள்!" பவுல் கூறினான். "நான் கர்த்தராகிய இயேசுவின் சிறைகைதி, ஆனால்" அவன் கூறினான். "கர்த்தருக்குள் என் ஊழியத்தை மேன்மைப்படுத்துகிறேன்". தேவனுடைய அன்பு எப்படியாய் அவனை, "நாய்கள்" என்று எண்ணப்பட்ட அசுத்தமான புறஜாதிகளின் மத்தியில் செல்லும்படி நெருக்கி ஏவியது. ஆனால் வேறு வார்த்தைகளில் கூறினால், "என்னுடைய ஊழியத்தை நான் கர்த்தருக்குள் மேன்மைப் படுத்துகிறேன், ஏனெனில் 'நாய்களுக்கு' சென்று ஊழியம் செய்யும்படியான சந்தர்பத்தை அவர் எனக்கு தந்தார்" என்று பவுல் கூறினான். 32. இயேசு, அவரும், அந்த புறஜாதி ஸ்திரீயை அழைத்தார், இங்கி ருக்கும் ஜனங்களாகிய, நம்மை போன்ற, சீரோபேனிக்கியா ஸ்திரீ யிடம், "பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல" என்றார். 33. அதற்கு அவள், "மெய்தான் ஆண்டவரே, ஆகிலும் எஜமானுடைய மேஜையில் இருந்து விழும் துணிக்கைகளை அந்த நாய்கள் திண்ண விரும்புகிறதே" என்றாள். 34. அது அவரை ஈர்த்தது. சீக்கிரமாக யூதர்களின் கண்கள் குருடாக் கப்பட வேண்டும் என்பதையும், அவர் புறஜாதிகளிடமாய் திரும்ப வேண்டும் என்பதையும் அறிந்ததால், அது பரிசுத்த ஆவியை எழுப்பியது. 35. நான் உங்களுக்கு ஒரு சிறிய இரகசியத்தை கூற விரும்புகிறேன். நான் ஸ்தோத்தரிக்கும் கர்த்தர், வியாதியஸ்தற்காக ஜெபிப்பதில் என்னை மிகவும் ஆசீர்வதித்திருக்கிறார். இவ்வளவு வருடங்களாக நான் அதை கவனித்து, அதை நான் முற்றிலுமான உண்மை என்று கண்டறிந்திருக்கிறேன். எந்த நபருக்காக நான் ஜெபிக்கிறேனோ அந்த நபரோடு நான் ஒரு உண்மையான ஐக்கியத்திற்குள் செல்லும்வரை என்னால் ஒருபோதும், ஒருபோதும் என்னுடைய ஜெபத்திற்கு பதில் பெறமுடிவதில்லை. நீங்கள் உங்களை தாழ்த்தி அந்த நபருடைய நிலையை நீங்கள் உணரவேண்டும். 36. இங்கே கொஞ்ச நாட்களுக்கு முன்பு மெக்ஸிகோவில் (Mexico). பரிதாபமான, வயதான மெக்ஸிக்க மனிதன், கருப்பாக, நரைத்த தலை முடியுடன், அவருடைய மீசையும் நரைத்து இருந்தது, ஒருவேளை அவருடைய ஜீவியத்தில் ஒருபோதும் நல்ல உணவை சாப்பிட்டே இருக்க மாட்டார். அவர் அங்கே மேடைக்கு வந்தார்; விசுவாசத்தின்படி ஒரு கத்தோலிக்கர்; ஒரு சிறிய வெள்ளை சால்வையுடன், ஷூ (shoes) எதுவும் இல்லாமல் நகர்ந்து வந்துக் கொண்டிருந்தார், அவருடைய பாதத்தில் சுருக்கம் விழுந்திருந்தது. அவர் என்னை தேடிக்கொண்டிருந்தார். மேலும் அவர் என் முன் முழங்கால் படியிட்டபோது, அவருடைய கரத்தை பிடித்து தூக்கினேன். அவர் கையை நீட்டி தன்னுடைய ஜெப மாலையை (bead) தேடினார், பழைய தேய்ந்துபோன ஜெபமாலை போன்றிருந்தது; அவர் தன்னுடைய ஜெபத்திற்காக அதை மிகவும் அதிகமாக தேய்த்திருந்தார். நான் கூறினேன், "அப்பா, அது தேவையில்லை. நீங்கள் அதை செய்யவேண்டிய அவசியமில்லை. ஒரு நிமிடத்திற்கு அதை அப்பாலே போடுங்கள்" என்று மொழி பெயர்ப்பாளர் அவரிடம் கூறிக்கொண்டிருந்தார். அதன்பின் அவர் என்னிடமாக வந்தார். நான் கூறினேன், "அப்பா, சற்று இங்கே வாருங்கள். நீங்கள் கர்த்தராகிய இயேசுவை விசுவாசிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். "அவர் தன்னுடைய வயதான கரங்களை மேலே உயர்த்தி, என்னுடைய தோள்பட்டைகளை பிடித்துக் கொண்டு, அவர் தலையை என் தோளின் மீது சாய்த்துக் கொண்டார். அந்த தூசு படிந்த, அழுக்கான, சுருக்கம் விழுந்த பாதத்தை நான் கீழே பார்த்தேன். நான் என்னுடைய ஒரு ஷூவை (shoe) கழற்றி, அது அவருக்கு பொருந்துமா என்று பார்த்தேன். அவர் அந்தவிதமாக நடப்பதை பார்ப்பதற்கு பதிலாக நான் வெறுங்காலில் நடப்பேன். பாருங்கள், என் இருதயம் அவருடைய நிலையை உணர்ந்தது. அவர் குருடாயிருந்தார். 37. இப்பொழுது, அப்படி செய்யும் போது தான் நீங்கள் உண்மை யாகவே அதற்குள் செல்கிறீர்கள். நம்முடைய நாகரீகங்கள் எல்லாம் ஒழிந்துபோகும். நம்முடைய அடையாளங்கள் எல்லாம் ஒழிந்துபோகும். நம்முடைய வரங்கள் எல்லாம் ஒழிந்துபோகும். "ஆனால் அன்பு ஒருகாலும் ஒழியாது". அதுதான் வழுவாமல் இறுகி பிடிக்கிறது. 38. "பரிதாபமான, வயதான நபர், என் தகப்பனார் உயிரோடிருந்தால் என்ன வயது இருக்குமோ அந்த வயதிருக்கும்" என்று நான் நினைத்தேன். "ஒருவேளை இவருக்கும் கூட எங்கேயோ பிள்ளை இருக்கும்" என்று நான் நினைத்தேன். மேலும் அவர் ஏதோவொன்றை முனுமுனுத்துக் கொண்டிருந்தார், மொழிபெயர்ப்பாளர் அதை எனக்கு கூறவில்லை. அந்த வயதான நபரை நான் பார்த்தேன். என்னால் முடியவில்லை... என்னுடைய கண்களால் அல்ல, ஆனால் என்னுடைய இருதயத்தில், என்னால் ... கண்ணீர் துளிகள் விழுவது போன்று இருந்தது."மிகவும் பரிதாபமான நபர்!", நான் நினைத்தேன், "ஒருவேளை அவர் தன்னுடைய ஜீவியத்தில் ஒருபோதும் நல்ல உணவை சாப்பிட்டு இருக்க மாட்டார்; கந்தை துணியோடு இருந்தார்". நான் அவரோடுகூட அந்நிலைக்குள் சென்றேன், நான் அவருடைய துன்பத்திற்குள் சென்றேன். நான் நினைத்தேன், "ஏழையாக இருந்தபோதிலும், அவருடைய அந்நிலைமையில் அவருடைய துன்பத்தோடு இருந்தபோதிலும், இன்னுமாக ஒரு இருண்ட உலகில் இருக்கிறார், பார்க்க முடியாமல், குருடாக". "ஓ தேவனே, என்னுடைய அப்பா அங்கே நின்றிருந்தால்?" என்று நான் நினைத்தேன். அப்பொழுது அவருடைய நிலையை நான் உணர்ந்தேன். "பரலோக பிதாவே, இந்த பரிதாபமான பார்வையில்லாத மனிதனுக்கு இரக்கமாயிரும்" என்று நான் கூறினேன். அது என்னுடைய தலையிலிருந்து ஏறெடுக்கப்பட்ட ஜெபமல்ல. என்னுடைய இருதயத்திலிருந்து அதற்காக ஜெபித்த ஏதோவொன்றாய் அது இருந்தது. பாருங்கள், அந்த அன்பு! 39. அவர் இப்படி கூறிக்கொண்டு செல்வதை நான் கேட்டேன், [சகோதரன் பிரன்ஹாம் அந்த சகோதரனை போல் ஒலி எழுப்பி காட்டுகிறார் - ஆசி] மேலும் இங்கே பத்தாயிரம் மெக்ஸிகர்கள் உரக்க கத்தினார்கள். அது என்னவென்று நான் வியந்தேன். "என்னால் பார்க்க முடிகிறது! என்னால் பார்க்க முடிகிறது!" என்று அவர் உரக்க கத்திக்கொண்டிருந்தார், அங்கே அவர் முழுவதுமாக திரும்பியவாறு முழங்கால் படியிட்டு, என்னுடைய ஷூவை தேய்க்க ஆரம்பித்தார், என்னை என்னுடைய காலில் தட்டிக்கொடுக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். நான் அவரை எழுப்பி நிற்க செய்தேன். அவர் இங்கும் அங்குமாக ஓடினார். அந்த பரிதாபமான நபர் கீழே இறங்கி, கத்திக் கொண்டிருந்தார். [சகோதரன் பிரன்ஹாம் மறுபடியும் அந்த சகோதரன் போல் ஒலி எழுப்புகிறார் - ஆசி] "என்னால் பார்க்க முடிகிறது, என்னால் பார்க்க முடிகிறது". 40. அது என்னவாயிருந்தது? அவருடன் ஐக்கியத்திற்குள் செல்வ தாயிருந்தது. அன்பு, அதுதான் அதை செய்கிறது. எந்த கடினமான முயற்சியுமில்லை; சுத்தமான, கலப்படமில்லாத அன்பு மட்டுமே. கைகளை வைக்கும் எல்லா வரங்களையும் அது தோற்கடித்து விடும். அது எல்லா வியாக்கியானங்களையும் மற்றும் அந்நிய பாஷை பேசுவதையும் தோற்கடித்துவிடும். அது எல்லாவற்றையும் தோற்கடித்து விடும்... அதை நான் இனிமையான பாடலின் குரல்களில் கூறுவேன். கர்த்தராகிய இயேசுவிற்காக நீங்கள் ஜெயிக்க விரும்பும் அந்த நபரோடு கூட நீங்கள் மாத்திரம் தேவனுடைய அன்பிற்குள் செல்வீர்கள் என்றால், அது ஒவ்வொன்றையும் தோற்கடித்துவிடும். 41, "ஓ," நீங்கள் கூறலாம், "சகோதரன் பிரன்ஹாமே, நான் வியாதி யஸ்தர்களுக்காக ஜெபிப்பதில்லை. என்னிடம் ஒரு நபர் இருக்கிறார்..." 42. அவன் இரட்சிக்கப்படவில்லையென்றால், எல்லாம் சரிதான்! அதை சற்றே பாவனை செய்யாதீர்கள். பரிசுத்த ஆவியானவர் அதைக் காட்டிலும் மேலாக அறிவார். நீங்கள் ஒரு மாய்மாலக் காரனாய் இருக்காதீர்கள். நீங்கள் அதை உண்மையாகவே செய்யுங்கள். இரவும் பகலும் உங்களால் அதை பொறுத்துக்கொள்ள முடியாதவரை நீங்கள் உங்களுடைய அந்த இழந்துபோன நண்பனின் மீது ஆழமாக கவனத்தை செலுத்துங்கள். நீங்கள் அவர்களிடம் அன்போடு செல்ல வேண்டும். பரிசுத்த ஆவி என்ன செய்வார் என்பதை கவனித்து பாருங்கள். ஒவ்வொரு முறையும், அவனை அவர் உங்கள் பக்கமாக இழுப்பார். "தேவனுடைய அன்பு நம்மை நெருக்கி ஏவுகிறது". 43. பாருங்கள், நான் இன்னும் வேத வாக்கியத்திற்கு கூட வர வில்லை, நான் முடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது; பிள்ளைகள் வந்துகொண்டிருக்கின்றனர். எப்படியாயினும், ஒரு வசனத்தை நாம் வாசிக்கலாம். இயேசு கிறிஸ்துவை பற்றின வெளிப்பாடு, தேவன் அவருக்கு ஒப்புவித்ததும்.... (ஆங்கில வேதாகமத்தில் உள்ளபடி மொழி பெயர்ப்பு - ஆசி) 44. நான் அதை நேசிக்கிறேன். நீங்கள் நேசிக்கவில்லையா? "வெளிப்பாடு". வெளிப்பாடு என்றால் என்ன? அது ஏதோவொன்று வெளிப்படுத்தப்பட்டதாயிருக்கிறது. இந்த வேதாகமமே "இயேசு கிறிஸ்துவை பற்றின வெளிப்பாடு" தான். இந்த யேசு கிறிஸ்துவை பற்றி வெளிப்படுத்துவதற்கு வேதாகமே தான். ஆதியாகமம் கிறிஸ்துவை வெளிப்படுத்துகிறது. யாத்திராகமம் கிறிஸ்துவை வெளிப்படுத்துகிறது. ஓ, என்னே! நான் அவ்விடங்களுக்கு சென்றால், நான் உடனே பக்திபரவசமடைகிறேன் அல்லது அதை உணருகிறேன். எல்லா இடங்களையும் எல்லா காலங்களையும் நிரப்பும் பரிபூரணமெல்லாம் அவருக்குள் வாசம் செய்யும்படிக்கு ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம், யோசுவா, அவை எல்லாம், ஒவ்வொன்றுமே, நகோமியும், ரூத்தும், யோபும், அவர்கள் எல்லாருமே இயேசு கிறிஸ்துவை பற்றிய வெளிப்பாடாயிருக் கின்றனர். மேலும் நித்தியம் முழுவதிலும் இருக்கிறது இயேசு கிறிஸ்து தான். கர்த்தராகிய இயேசுவிடம், அந்த உயிர்த்தெழுதலில், மனித இனமானது அறிமுகப்படுத்தப்படும். அந்த மகத்தான சந்திக்கும் நாளுக்கான விதைகள்தான் இங்கிருக்கும் எல்லா சிறிய காரியங்களும். "வெளிப்பாடு", தேவன் வெளிப்படுத்துகிறார். 45. மரம் இயேசு கிறிஸ்துவை வெளிப்படுத்துகிறது. பூ இயேசு கிறிஸ்துவை வெளிப்படுத்துகிறது. பரிசுத்தமாக்கப்பட்ட ஜீவியம் இயேசு கிறிஸ்துவை வெளிப்படுத்துகிறது. நிச்சயமாக. "எப்படி பூவானது இயேசு கிறிஸ்துவை வெளிப்படுத்துகிறது என்று கேட் கலாம்?". அது இலையுதிர் காலத்தில் மரித்து, வசந்த காலத்தில் உயிர்த்தெழுகிறது. ஆமென். அது பூமியில் தனக்கான ஸ்தானத்தில் சேவைசெய்து, அழகுபடுத்துகிறது. அது தன்னுடைய சிறிய இருதயத்தை அவ்விதமாக திறந்து, கூறுகிறது... வழிபோக்கர் பார்க்கிறார்கள், "ஓ, அது அருமையாயிருக்கிறதல்லவா! என்னே ஒரு நறுமணம்! அந்த மலரை முகர்வதில் என்னே ஒரு வாசனை!". மேலும் தேனீ வந்து, "என்னுடைய பங்கை நான் எடுத்துக்கொள்கிறேன்" என்று கூறுகிறது. வேடிக்கை பார்ப்பவர் வந்து தன்னுடைய பங்கை எடுத்துக்கொள்கிறார். அது பிரகாசத்தை வீச, தன்னைத்தானே வேறொருவருக்கு அளிக்கும்படியாக பகலும் இரவும் பிரயாசப்படுகிறது. "காட்டுப் புஷ்பங்கள் எப்படி வளருகிற தென்பதைக் கவனித்துப்பாருங்கள். அவைகள் உழைக்கிறது மில்லை, நூற்கிறதுமில்லை; என்றாலும் சாலொமோன் முதலாய்த் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்று இயேசு கூறியதில் வியப்பொன்றுமில்லை. 46. அப்படியானால், அந்த லீலிபுஷ்பம் கிறிஸ்துவை வெளிப் படுத்துகிறது. அவர் "பள்ளத்தாக்கின் லீலிபுஷ்பம், சாரோனின் ரோஜா" என்று அழைக்கப்படுகிறார். அது புரிகிறதா? 47. எப்படியாய் திரு லீலிபுஷ்பம், பாஸ்டர் லீலிபுஷ்பம், அவர் ஒரு அருமையான பள்ளிக்கூடமாயிருக்கிறார்... திரு லீலிபுஷ்பம் அவர்கள் ஒரு அருமையான வேதாகம போதகராயிருக்கிறார்; அவர் அந்த இருளான இடமாகிய பள்ளதாக்கினுள் சென்று, தன்னை தானே பூமியின் இருளிலிருந்து உந்தித்தள்ளி மேலே வந்தார். எனவே, எதற்காக வந்தார், தன்னை மகிமை படுத்திக் கொள்ளவா? அவரிடம் தொடர்பில் வரும் ஒவ்வொன்றையும் மகிமைப்படுத்தவே. தன்னுடைய பிரகாசமான அழகை (radiance of beauty) காத்துக் கொள்ளவும், வாசனை வீசிக்கொண்டே இருக்கவும் அது பகலும் இரவும் பிரயாசப்பட வேண்டியிருக்கிறது. வெளியே கொடுக்கப்படுவதற்காக அது பூமியிலிருந்து பகல் இரவாக பறிக்கப்படுகிறது. 48. ஒரு உண்மையான கிறிஸ்தவனும் அதைதான் செய்கிறான். உங்களையே நீங்கள் வேறொருவனுக்கு கொடுக்கும்படி, நீங்கள் ஜெபித்து உங்களை தாழ்த்தி, பகலும் இரவும் தேவனுக்கு முன்பாக இருங்கள். நீங்கள் எதை வைத்துக்கொள்கிறீர்களோ அதுவல்ல, நீங்கள் எதை கொடுக்கிறீர்களோ, அதுவே கணக்கில் வரும். நீங்கள் உங்களையே மற்றவனுக்காக கொடுக்க வேண்டும். அதே விதமாகத்தான் இயேசுவும் செய்தார், அவர் தன்னைத் தானே மற்றவனுக்காக கொடுத்தார். 49. மேலும் இங்கிருக்கும் அவரை பற்றின இந்த வெளிப்பாடு தான், எழுதப்பட்ட கடைசியான வெளிப்பாடு! இயேசு கிறிஸ்துவை பற்றிய வெளிப்பாடு, தேவன் அவருக்கு ஒப்புவித்ததும், சீக்கிரத்தில் சம்பவிக்க வேண்டியவைகளை ஊழியக்காரர்களுக்கு காண்பிக்கும் பொருட்டு.... (ஆங்கிலத்தில் உள்ளபடி மொழிபெயர்ப்பு-ஆசி) 50. இதுதான் கடைசி புஸ்தகம், அதை வெளிப்படுத்தும்படி அவர் தம்முடைய தூதர்களை அனுப்பினார். தம்முடைய தூதர்களை அனுப்பி தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தியது: 51. என்னே, எப்படியாய் நாம் அதை ஒரு வாரம் பார்க்கலாம். கவனியுங்கள், அது ஒரு வெளிப்பாடாயிருக்கிறது, "காலம் சமீப மாயிருக்கும்போது", கடைசி காலத்தில் இருக்கும் தேவனுடைய "ஊழியக்காரர்களுக்கு", இந்த புஸ்தகம் வெளிப்படுத்தப்படும் போது, இந்த புஸ்தகம் ஒரு வெளிப்பாடாயிருக்கிறது. இப்பொழுது, அந்த புஸ்தகமானது கடைசி காலம் வரை, மூடப்பட்டு, புதைப் பொருளாக்கப்பட்டு. முத்தரிக்கபட்டிருக்கிறது என்பதை நாம் அந்த புஸ்தகத்திலே கண்டறிகிறோம். காலங்கள் தோறும் அவர்கள் அதை முயற்சி செய்தனர். நினைவில் கொள்ளுங்கள், தன்னுடைய சிங்காசனத்தில் வீற்றிருந்த தேவனுடைய கையிலிருந்து எடுக்கப்பட்ட அந்த வேதாகமமானது, அது மூடப்பட்டதாயும், பின்பக்கத்தில் ஏழு முத்திரைகளால் முத்திரிக்கபட்டதாயுமிருந்தது, வானங்களிலாவது (Heavens) பூமியிலாவது, எங்கேயும் எந்த மனுஷனும் அந்த புஸ்தகத்தை எடுக்கவும் அல்லது அந்த முத்திரைகளை உடைக்கவும் அல்லது அதை பார்க்கவும்கூட பாத்திரவானாக இல்லை. ஆனால் ஆட்டுக்குட்டியானவர் வந்து அதை திறந்தார். 52. உங்களுக்கு தானியேல் நினைவிருக்கிறதா? தானியேல், கடைசி காலத்தில், அவனுடைய ஊழியத்தின் முடிவில், தன்னுடைய கடைசி தரிசனத்தை அவன் கண்டான்; ஒரு தரிசனம் காண்பவன் (a vision-seer). 53. மேலும் இங்கே பாருங்கள், "தம்முடைய தூதனை அனுப்பி", பெந்தேகொஸ்தேக்கு பிறகு சுமார் அறுபது ஆண்டுகள் கழித்து, இங்கே அவர், "சீக்கிரத்தில் சம்பவிக்க வேண்டியவைகளை வெளிப் படுத்தும்படி தம்முடைய தூதனை அனுப்புகிறார்". 54. இப்பொழுது, வெளிப்படுத்தின விசேஷத்தின் புஸ்தகம் எப்பொழுது எழுதப்பட்டது? முதலாவதாக, அது உலக தோற்றத்துக்கு முன்பே எழுதப்பட்டது. மேலும், யோவான், பரிசுத்த ஆவியினால்-நிரப்பப்பட்ட இருதயத்துடன் மட்டுமே! நீங்கள் பார்கிறீர்களா? 55. தூதர்கள் (Angelic beings) ஒன்றாக இணைகிறார்கள். ஓ, நீங்கள் அதை புரிந்துகொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன், அது இப்பொழுதுதான் இலவசமாக வெளிப்பட்டது. பாருங்கள்! மேலும் நீங்கள் பரிசுத்த ஆவியை உங்களில் பெற்றிருந்தால், அப்பொழுது நீங்கள் காணக்கூடாத உலகத்தோடும் இயற்கைக்கு மேம்பட்டதோடும் இணைந்துகொள்ள தகுதியாகிறீர்கள். ஜனங்களால் அதுபோன்ற காரியங்களை விசுவாசிக்க முடியவில்லை என்பதில் வியப்பொன்றுமில்லை, அவர்கள் ஒருபோதும் தொடர்பில் வருவதே கிடையாது. விசுவாசிப் பதற்கென்று அவர்களிடம் இங்கே ஒன்றுமே இல்லை. ஆனால் பரிசுத்த ஆவி அந்த இருதயத்தினுள் வரும்போது, உடனே அப்பொழுது அவன் ஒரு ஒரு இரட்டை ஜீவனாகி (twofold being) விடுகிறான்: ஒன்று பூமிக்குரியது, மரிப்பதற்காக; இன்னொன்று பரலோகத்திற்குரியது, ஜீவிப்பதற்காக. ஆமென். அவனுடைய சரீரத்தில் அவன் இன்னமும் கூட மரணத்திற்கு பாத்திரனாயிருக்கிறான். ஆனால் அவனுடைய ஆத்துமாவிலோ, அவன் மரணத்தை விட்டு நீங்கலாகி ஜீவனுக் குட்பட்டிருக்கிறான். அவனுடைய சரீரத்தில், தன்னுடைய ஐம்புலன்களால் அவன் தன்னுடைய பூமிக்குரிய தொடர்பை கொண்டி ருக்கிறான்; அவன் தன்னுடைய ஆவியில், பரிசுத்த ஆவியின் மூலமாக தேவனோடு தொடர்பு கொள்கிறான். தேவ தூதர்கள் (Angels of God) அவர்களை சந்தித்து, அவர்களோடு பேசுகிறார்கள், தேவனிடமிருந்து தனிப்பட்ட கொண்டு செல்லவும், வெளிப்படுத்தவும் அவர்கள் தேவனால் நபர்களுக்கு செய்திகளை அனுப்பப்படும் செய்தியாளர் களாயிருக்கிறார்கள். அவன் முதலில் முதலானதை பெற்றிருக்க வேண்டும். அஸ்திபாரம் போடுவதற்கு முன்பே நீங்கள் தூபி மாடத்தை (cupola) வைக்க முடியாது. பாருங்கள்? ஆகவே நாம் அதை நினைவில்கொள்ளவேண்டும், முதலாவது காரியத்தை முதலில் வையுங்கள்! "முதலாவது தேவனுடைய இராஜ்யத்தையும் தேடுங்கள், அப்பொழுது இவைகள் எல்லாம் உங்களுக்குக்கூட அவருடைய நீதியையும் கொடுக்கப்படும்'. இந்த காரியங்களை வெளிப்படுத்த தூதன் அனுப்பபட்டான்... 56. தானியேல், ஒரு மகத்தான தீர்க்கதரிசி, அவன் தன்னுடைய ஊழியத்தை முடிக்கும் தருவாயில், அங்கே ஒரு தூதன் அவனை பின்தொடர்ந்தான். அந்த தூதன் தானியேலிடம், "தேவனுக்கு முன்பாக நீ பிரியமானவன்" என்று கூறினான். இப்பொழுது, நிச்சயமாக, தானியேலால் தேவனோடு முக முகமாய் பேச முடியாது, ஆனால் தேவன் ஒரு தூதனை அனுப்பினார். இடை... அவருக்கும் தானியேலுக்கும் நடுவே இடைப்படுவதற்கு அதாவது அவர்களுக்கு மத்தியில் அவர் பேசி கொண்டுவர தூதன், தூதன் எனும் வார்த்தைக்கு "செய்தியாளன்" என்று அர்த்தம். 57. ஒரு பையன் கதவிடம் வந்து, அந்த கதவை தட்டி, வாயிள் காப்போரிடம், "திருமதி. இன்னார் -இன்னாருக்கு மேலும் திரு. இன்னார்-இன்னாருக்கான தபால் என்னிடம் இருக்கிறது" என்று கூறினால், அவன் ஒரு செய்தியாளனாயிருப்பான், அல்லது ஒரு பூமிக்குரிய தூதனாயிருப்பான். 58. உங்களுடைய பாஸ்டர், அவர் இங்கே மேடையில் நின்று, தேவனுடைய வார்த்தையை பிரசங்கிக்கும்போது, அவர் சபைக்கான தேவனுடைய தூதனாயிருக்கிறார், சபைக்கான செய்தியாள னாயிருக்கிறார். ஆனபடியால் ஒரு பாஸ்டர் ஒருபோதும் அந்த வார்த்தையை விடவே கூடாது, ஆனால் சரியாக அந்த வார்த்தையோடு தரித்திருக்க வேண்டும், ஏனெனில் அவர் மேய்ப்பனின் ஸ்தானத்தில் இருந்து போஷிக்கிறார். ஏனெனில், பாஸ்டர் எனும் வார்த்தைக்கு "மேய்ப்பன்" என்று அர்த்தம். அதை தேடி பார்த்து அது சரியா என்று கண்டறியுங்கள். ஒரு பாஸ்டர் மேய்ப்பனாயிருக்கிறார், ஒரு குறிப்பிட்ட மந்தைக்கு அவரை கண்காணியாக பரிசுத்த ஆவியானவர் ஏற்படுத்தியிருக்கிறார், அவர்களை போஷிக்கும்படி (எதைக் கொண்டு?) தேவனுடைய வார்த்தையைக் கொண்டு. ஆமென். ஓ, என்னே! என்னே ஒரு... 59, அந்த எல்லா பெயர்களையும் கவனியுங்கள், அவைகளுக்கு ஏதோ அர்த்தம் இருக்கிறது, வேதாகமத்தில் இருக்கும் ஒவ்வொரு பெயருக்குமே. நீங்கள் வேதாகமத்தில் ஒரு பெயரை பார்க்கும் போது, அதற்கு ஏதோவொரு அர்த்தம் இருக்கிறது. உங்களுக்கு தெரியுமா, இஸ்ரவேலின் மனைவிகள், அந்த பன்னிரண்டு கோத்திர பிதாக்களை பிரசவித்தபோது.... அந்த தாய்மார்கள் ஒவ்வொருவரும், தங்கள் குழந்தையை பெற்றெடுக்கும் போது, அந்த குழந்தையை பிரசவிக்கையில், அவர்களின் பிரசவ வேதனையின் போது; அந்த தவிப்புகளின் பெருமூச்சி வெளியே வந்து அந்த பையன்களுக்கு பெயரிட்டது. அவர்களின் அந்த தவிப்புகளின் பெருமூச்சி, அந்த பிள்ளையின் சுபாவத்தையும், அவர்கள் இறுதியாக எங்கே இளைப்பாற போகிறார்கள் என்பதையும் வெளிப்படுத்தியது. ஒவ்வொரு தவிப்பின் பெருமூச்சும், ஆமென், பரிசுத்த ஆவியின் வல்லமையின் கீழிருந்தது! 60. அந்த காரணத்தால்தான் நாமும் ஆவியில் தவிக்கவேண்டும். இப்பொழுது, இந்த போலியானவைகளை குறிப்பிடவில்லை. ஆனால் உண்மையாகவே சபைக்காக பிரசவ வேதனைப்படுவதை குறிப்பிடுகிறேன். அப்பொழுது பரிசுத்த ஆவி... அப்பொழுது நீங்கள் அசலான அந்நிய பாஷை பேசுதலையும் மற்றும் வியாக்கியானம் பண்ணுவதையும் பெறுவீர்கள். "ஆவியானவர் தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுககளோடும் ஜெபத்தோடும் வேண்டுதல் செய்கிறார்", மிக மிக உண்மையாகவும் இருங்கள். இப்பொழுதே சரியாக ஏதோவொன்று சம்பவிப்பதை நீங்கள் காண்பீர்கள். 61. பின்பு தானியேல், கடைசியில், முடிக்கையில், அவன் கண்டான், "ஒரு தூதன் இறங்கிவந்து, ஒரு பாதத்தை பூமியின் மேலும் மற்றொன்றை சமுத்திரத்தின் மேலும் வைத்தான், ஒரு வானவில் அவன் தலையின் மேல் இருந்தது. அவன் தன்னுடைய கரங்களை உயர்த்தி சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவர் மேல் ஆணையிட்டு, "இனி காலம் செல்லாது'' என்று, அந்த காலத்தின் முடிவிலே அதை அவன் அவனிடம் கூறினான். வேறு வார்த்தைகளில் கூறினால், பிரபு வந்த காலம் முதல், இன்று வரை, இந்த, இப்பொழுது நாம் வாழ்ந்துகொண்டி ருக்கும் இந்த காலப் பகுதியில், மேலும் கூறினான், "அந்த காலத்திலே, தேவ இரகசியம் நிறைவேறும்." 62. மேலும் உலகமானது இன்றைக்கு பிரசவ வேதனைப்பட்டு, தவித்துக்கொண்டிருக்கிறது. ஜனங்கள் தேவனை பற்றின பரமரக சியத்தை அறியவில்லை. ஏன்? ஏனெனில் அவர்களுக்கு தேவனை பற்றின பரமரகசியம் போதிக்கப்படவில்லை. அவர்களுக்கு போதிக்கபடும் ஒரே விஷயம் என்னவென்றால், 'சபையை சேர்ந்துகொள், உன்னுடைய பெயரை புஸ்தகத்தில் எழுதிக் கொள், ஒரு நல்ல மனிதனாய் இரு, உன்னுடைய பக்கத்து வீட்டுக்காரனை சரியாக நடத்து". அது எல்லாம் சரிதான், ஆனால் நீங்கள் தேவனை பற்றின பரம ரகசியத்தை அறியவேண்டும்! அந்த புஸ்தகத்தை வைத்திருந்தவரை தவிர வேறு எந்த மனுஷனாலும் அதை உங்களுக்கு வெளிபடுத்த முடியாது. மேலும் வேதாகமம் கூறுகிறது, "பரிசுத்த ஆவி இல்லாமல், எந்த மனுஷனும் இயேசுவை கிறிஸ்து என்று அழைக்க முடியாது". இந்த மகிமையான, பழைய பரிசுத்த ஆவியின் சபை இந்நாட்களில் ஒன்றில் வெளியே வந்து, நீங்கள் ஒருபோதும் கண்டிராத அளவிற்கு பிரகாசிக்கப் போகிறது! 63. பிரதான அத்தியட்சகர்களும் மற்றவர்களும் எழுதும் இந்த சிறப்பான சுவிசேஷ பத்திரிக்கையில், ஒரு சிறந்த எழுத்தாளார், மெக்கே, முழு உலகத்தில் இருக்கும் சிறப்பானவர்களில் அறியப் பட்டவர் ஒருவர். அவருடைய இந்த மாத பத்திரிக்கையில் ஒரு சிறந்த கட்டுரையில் கூறினார், "கத்தோலிக்கர்களோ அல்லது பிராடஸ்டேன்ட் சபையோ எப்பொழுதாவது தேவனை கண்டுபிடித்தால், அவர்கள் பெந்தேகொஸ்தேயினரின் பாதப்படியில் அமர்ந்து அதை கற்று கொள்வார்கள்". ஆமென். தேவனை பற்றி படிப்பதின் (theology) மூலமாக தேவனை அறியமுடியாது! புதிய பிறப்பினால், மறுபடியும் பிறப்பதின் மூலமே அவரை அறியமுடியும். பெந்தேகொஸ்தே சபை ஏற்றுக் கொண்டு விசுவாசித்தது, அதை பற்றி யார் என்ன நினைக்கிறார்கள் என்று கவலைப்படவில்லை. அவர்கள் அதை ஏற்றுக்கொண்டார்கள். அந்த பக்கத்தை கொஞ்சம் மாசுபடுத்தும்படி இப்பொழுது பிசாசு அதில் சில போலிகளை ஏற்படுத்தியிருக்கிறான். சுவிசேஷ சபை (Evagelical church) அந்த மாசை சுட்டிக்காட்டி, மேலும் உண்மையான, அசலான, மறுபடியும் - பிறந்த, எல்லா அடையாளங்களோடும் அற்புதங்களோடும் இருக்கிற பெந்தேகொஸ்தே சபையின் மீது சுட்டிக்காட்டுகிறது. அவர்கள் அந்நிலையில் இருக்கிறார்கள், ஆனால் பிசாசு தன்னுடைய போலிகளை கொண்டிருக்கிறான், அவன் கொண்டி ருப்பான் என்று வேதாகமம் கூறியவாறே. 64. ஆனால், நினைவில்கொள்ளுங்கள், அந்த தூதனால் தானியேலுக்கு அறிவிக்கப்பட்டது. தானியேல் ஏழு இடிகளை கேட்டான். அவைகள் தங்கள் சத்தங்களை சத்தமிட்டு முழங்கின. தானியேல் தன்னுடைய எழுதுகோலை எடுத்து, எழுத ஆரம்பித்தான், ஆனால் அந்த தூதன் "நீ அதை எழுதாதே!" என்றான். ஆமென். 65. நீங்கள் தயாராயிருக்கிறீர்களா? அடுத்த ஐந்து நிமிடத்திற்கு உங்களுக்கு சம்மதமா? நாம் அதற்குள்ளாக செல்வோம். உங்களுக்கு கவனியுங்கள். 66. "நீ அதை எழுதாதே!" யோவானும் அதே காரியத்தையே கண்டான், அது ஏற்கனவே வேதாகமத்தின் வெளிப்புறத்தில் எழுதப்பட்டிருந்தது; மேலும் புஸ்தகத்தின் பின்புறத்தில் ஏழு முத்திரைகள் இருந்தன, அதாவது எந்த மனுஷனும் அந்த முத்திரைகளை உடைக்க முடியாதபடிக்கு, அவைகள் அந்த சத்தங்களாயிருந்தன. இங்கே வேதாகமம் இருக்கிறது. எழுதப்பட்டதாய், இதுவே பரமரகசியம்தான். ஆனால் வேதாக மத்தின் பின்புறத்தில், தானியேலுக்கு காண்பிக்கப்பட்ட அந்த வெளிப்பாடுகள், கூறியது ஏழு சத்தங்கள் முழக்கமிடப்படப் போகிறது, அதாவது எந்த மனுஷனாலும் திறக்கமுடியாதபடிக்கு. எந்த மனுஷனும் அது என்னவென்பதை அறியவில்லை. ஆனால் வேதாகமம் கூறியது, அது தானியேலிடம் கூறியது. மேலும் யோவனிடமும் கூறியது, அதாவது "கடைசி நாட்களில், இந்த ஏழு சத்தங்களும் அசலான, உண்மையான சபையால் அறியப்படும் என்று". நீங்கள் அதை புரிந்துகொண்டீர்களா? மகத்தான மனிதர்கள் அதுபோன்ற இடங்களுக்கு செல்லாதபடிக்கு அந்த கள்ள மற்றும் போலியானவைகள் எங்கே தங்களுடைய சிறந்ததை முயற்சிக்கின்றன என்பதை உங்களால் காண முடிகிறதா? 67. சரியாக நேற்றைக்கு முந்தைய தினத்தில், பிற்பகல் வேளையில், முழு உலகத்தில் இருக்கும் மகத்தான சுவிசேஷ மனிதர்களில் ஒருவர், என்னுடைய அறையில் அமர்ந்து, அழுதவாறே, பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை பெற்றுக்கொண்டார்; அவருடைய பெயரும் மற்ற காரியங்களும் என்னிடம் இருக்கிறது, பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை தேடவும் மற்றும் அதை பற்றியும் மற்றும் அதின் வல்லமையை பற்றி பேசவும் வருவதற்காக, அவர் லூயிவில்லிற்கு வந்தவுடன், பில்லிகிரகாமோடு என் வீட்டிற்கு வர ஏற்பாடு செய்தார். இப்பொழுது, இதை மேற்கோள் காட்டவில்லை. பில்லி கூறினார், ஓரிடத்தில் கூறினார், "ஒரு பெண் ஒரு பெரிய முன்கழுத்து கட்டியுடன் நின்றபடி அழுது கொண்டிருந்தாள்" என்று கூறினார். ஏதோவொன்று அவரை தொட்டதாம், அவர் உடனே அவளுக்காக ஜெபிக்க துரிதமாக ஓடினாராம். மேலும் அவர், "எனக்கு என்ன நடந்தது?" என்றார். ஓ, என்னே! 68. தேவன், இந்த கடைசி நாட்களில், ஒவ்வொரு இடங்களிலிருந்தும் உண்மையான இருதயங்களை இழுக்கப்போகிறார். மேலும் பிசாசிடம் எவ்வளவு போலியனவைகள் மற்றும் பதர் இருக்கிறது என்பதெல்லாம் பொருட்டே அல்ல, தேவன் சரியாக அதிலிருந்து தன்னுடைய சபையை எழுப்புவார். இந்த மேடையில் நான் நின்றிருப்பது எவ்வளவு நிச்சயமோ, அவ்வளவு நிச்சயமாக அது முத்திரையிடப் படுவதாயிருக்கும். காலம் சமீபமாயிருக்கிறது. குளிர்ந்த சடங்காச்சாரம் நிறைந்ததெல்லாம் கொஞ்சம் கொஞ்ச மறைந்து போகிறது. எவான்ஜலிக்கள் மற்றும் சமூதாய பொது சுவிசேஷமும், மேலும் இந்த மற்ற காரியங்கள் எல்லாம் சென்றுவிட்டன. எந்தவொரு குருடனும் கூட பார்க்கும் விதத்தில் அந்த அருமையான பக்கம் ஒரு தீவிரமான மூட மத அபிப்ராயத்தில் (Radicalfanaticism) சென்று கொண்டி ருக்கிறது. ஆனால் தேவனோ தன்னுடைய சபையை வெளியே இழுத்துக் கொண்டிருக்கிறார்! 69. அந்த மகத்தான தண்ணீர் லீலி புஷ்பத்தை போன்று. அந்த சிறிய, சின்னஞ்சிறிய வித்து, ஒரு சேறு நிறைந்த, அசுத்தமான, அழுக்கான, தவளைகள் வாழும் கசடான குளத்தில் மிக அடியில் பிறக்கிறது. அது தன்னை அந்த இருளில் இருந்தும், அந்த எல்லா சேறுகளிலிருந்தும் மற்றும் எல்லா கசடுகளில் இருந்தும் உந்தி தள்ளி மேலே வந்து, நீங்கள் இதுவரை பார்த்த முகங்களிலேயே மிகவும் பிரகாசமான ஒன்றாக ஆகிறது, சூரிய ஒளியை போன்ற பிரகாசத்துடன் (Radiance). 70. அவ்வாறுதான் கோட்பாட்டு வெறிகளின் மத்தியிலும் பெருங் குழப்பத்தின் மத்தியிலும் பிறந்த ஜீவிக்கிற தேவனுடைய சபையும் இருக்கிறது. ஆனால் அவள் அந்த மாசு படிந்ததினூடாக, இப்பொழுது அவள் அந்த காரியங்களில் இருந்து மேலே வரும்வரை தன்னை உந்தித்தள்ளி, பறந்து செல்ல தன்னுடைய செட்டைகளை விரித்திருக்கிறாள். "பலர் இங்கேயும் அங்கேயும் ஓடுவார்கள்; தங்கள் தேவனை அறிந்திருக்கிற அந்த ஜனங்கள் அந்நாளில் அதற்கேற்றபடி செய்வார்கள்." தன்னுடைய சபைக்கான தேவனுடைய வெளிப்பாடு! அப்படியே தரித்திரு, சிறு மந்தையே, நீ இருக்கிற ஸ்தானத்திலேயே தரித்திரு. சகோதரி கெர்ட்டி மற்றும் சகோதரி ஆஞ்சி இங்கே "தொடர்ந்து பிடித்துக்கொண்டே இருங்கள்!" என்று பாடுவது வழக்கம், கவலைப்படாதே. தேவனை பற்றின பரமரகசியத்தை தன்னுடைய சபைக்கு வெளிப்படுத்தி காண்பிக்கும்படி, தேவன் காத்திருந்து, தொடர்ந்து முயற்சி செய்துகொண்டிருக்கிறார். அதுதான் இப்பொழுது கிறிஸ்துவின் வருகையையும் மற்றும் மகத்தான ஆயிர வருட அரசாட்சியையும் தாமதம் செய்கிறது, அதாவது இந்த மகத்தான இயற்கைக்கு மேம்பட்ட வல்லமை உண்மையாகவே சபையில் செயலற்ற (dormant) நிலையில் கிடப்பதுதான். 71. இந்த காலை வேளையில் மனிதர்களில் பலர் பிரசங்க பீடத்தில் நின்று, ஒரு சமுதாய சுவிசேஷத்தை பிரசங்கித்துக் கொண்டிருக் கின்றனர், ஆனால் அவனுடைய இருதயத்திலோ அவன் உண்மை யாகவே விசுவாசிக்கிறான். மேலும், (இந்த பகுதி ஒலிநாடாவில் தெளிவாக புரியவில்லை, Table -And, brother, he has the power to preach it, Message hub - he really belives that there is power to preach it. ஆசி) அதை பிரசங்கிபதற்கான வல்லமை. அவன் எதை பார்க்க விரும்புகிறான் என்றால், அதின் வல்லமையை அதின் அழகோடு இருக்க வைப்பதையே. அது நிறைவேறுவதை காண்பதற்காக மிகவும் நன்றி! இயேசு கிறிஸ்துவை பற்றிய வெளிப்படுத்துதல், அது வெளிப்படுவதை காண்பதில் மிக்க மகிழ்ச்சி! 72. "இயேசு", வேதாகமம் கூறியது, "அவர் நேற்றும், இன்றும் என்றும் மாறாதவர்". தேவன், அவருடைய முடிவில்லாத இரக்கத்தால். அவருடைய வார்த்தையினால், ஏதோ மர்மமான மூடபக்தி வைராக்கியத்துடன் இருக்கிற ஏதோவொன்றை பற்றிய ஏதோ வொன்றினால் அல்ல. ஆனால் வார்த்தையை பிரசங்கிப்பதின் மூலமாக, அவர் தன்னைத்தானே உயிர்த்தெழுந்த, ஜீவிக்கிற கர்த்தராகிய இயேசுவாக வெளிப்படுத்துகிறார் (manifesting). அவர் இங்கே பூமியில் இருந்தபோது செய்த அதே காரியங்களை செய்கிறார், தன்னுடைய வல்லமையினாலும், தன்னை வெளிப்படுத்துவதின் மூலமாக அவர் அதை மறுபடியுமாக செய்கிறார். "மேலும் நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட் டிருக்கும்போது, எல்லா மனிதரையும் என்னிடத்தில் இழுத்துக்கொள்வேன்," பசியான இருதயத்தை கொண்ட மகத்தான மனிதர்களை. 73. பெரிய ஆலோசனை சங்க கூட்டத்தில், வெகு நாள் ஆகவில்லை, 1958... தேவனுடைய வருகை 1958 வரை தாமதித்தால், போஸ்டன், மாசசூசெட்ஸில் (Massachusetts), உலகம் முழுவதிலும் இருந்து வரும் சுமார் அறுநூறு பிரதிநிதிகளுக்கு முன்பாக, தேவனுடைய இயற்கைக்கு மேம்பட்ட கிரியயை பிரதிநிதித்துவப்படுத்திக் காட்ட வேண்டுமென நேற்றைய தினத்தில் என்னிடம் கேட்கப்பட்டது. ஊழியக்காரர்களில் ஒருவர், பொதுவான சுவிசேஷத்தையுடைய ஒரு சிறந்த மனிதர், டேவிட் டுப்லேசிஸ் (David duPlessis), கூறினார், "சகோதரன் பிரன்ஹாம், உலகத்தில் இருக்கும் எல்லா பிரதிநிதிகளும் ஒன்றாக கூடியிருக்கையில், எல்லா இடங்களிலிருந்தும் கிறிஸ்தவ தேசங்கள் இந்த பெரிய ஆலோசனை சங்க கூட்டத்தில் ஒன்று கூடியிருக்கும் போது," கூறினார், "வார்த்தையை பேசி, பரிசுத்த ஆவியானவர் தற்போது நின்றுகொண்டிருக்கிறார் என்பதை வெளிப்படுத்திக் காட்டும் வல்லமை போதும்," "ஒவ்வொரு இடங்களிலும் இருக்கும் சுவிசேஷகர்கள் சுலபமாக உள்ளே வந்துவிடுவார்கள்." என்று அவர் கூறினார்." அவர்கள் அதையும் மற்றும் உண்மையான சுவிசேஷத்தையும் ருசிபார்க்கும்போது, அது புறஜாதிகளுடைய யுகத்தை முடித்து, கர்த்தராகிய இயேசுவின் இரண்டாம் வருகையை கொண்டு வரும். உத்தமமான இருதயங்களை அங்கேயே விட்டுவிட்டு மேலும் அதற்காக நரகத்தில் வேதனைபடும்படி விடுவதற்கு தேவன் நீதியற்றவர் கிடையாது. அவர் நீதியுள்ளவராயிருந்து, அவர் அதை எப்படியாயினும் அவர்களுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும். நாம் கடைசி நாளில் இருக்கிறோம். இயேசு கிறிஸ்துவை பற்றிய வெளிப்பாடு... தம்முடைய ஊழியக்காரர்களுக்கு காண்பிக்கும்பொருட்டு தேவன் அவருக்கு ஒப்புவித்ததும்... சீக்கிரத்தில் சம்பவிக்க வேண்டியவைகளும், அவர் தம்முடைய தூதனை அனுப்பி வெளிப்படுத்தினதுமான... (ஆங்கிலத்தில் உள்ளபடி மொழிபெயர்பு - ஆசி) 74. தூதன்! அவன் எப்படி அதை வெளிப்படுத்த போகிறான்? தேவன் இயேசு கிறிஸ்துவை பற்றிய வெளிப்பாட்டை, ஒரு ஊழியக்காரனிடம், தீர்க்கதரிசியிடம், பத்மு தீவிலே கொடுத்தார். "ஒரு தூதன் மூலம் அதை வெளிப்படுத்தினார்". ஆமென். நீங்கள் அதை கண்டுகொண்டீர்கள் என்று நான் நம்புகிறேன். அவர் அதிசயமானவர் அல்லவா? 75. யோவான் யாராயிருந்தான் என்பதை கவனியுங்கள். நாம் இன் னொரு வசனத்தை வாசித்துவிட்டு, நாம் முடிக்கலாம். இவன் தேவனுடைய வசனத்தை குறித்து சாட்சியாக அறிவித் திருக்கிறான்... (ஆங்கிலத்தில் உள்ளபடி மொழிபெயர்ப்பு - ஆசி) 76. ஏதோ வெறியெழுச்சியினால் (tantrum) அல்ல, அவன் அங்கே ஒரு சமுதாய சுவிசேஷத்துடன் (Social gospel) அமர்ந்திருக்கவில்லை. அவன் சரியாக வார்த்தையுடன் தரித்திருந்தான். அவன் சாட்சியாக அறிவித்தான்! எப்படி முடியும், அந்... வார்த்தை ஒரு வித்தாய் இருந்தால், அவன் என்ன பிரசங்கிக்கிறானோ அதிலிருந்து வார்த்தை வெளிப்பட்டாலொழிய அவனால் எப்படி சாட்சியாக அறிவிக்க முடியும்? வித்து பிறப்பிக்குமே! வித்தானது சரியாக சோளத்தை பிறப்பிக்காதவரை, அங்கே ஒரு சோள வயல் இருக்கிறதென்று என்னால் எப்படி கூறமுடியும்? அது சரிதானே? தேவன் யோவான் மூலம் சாட்சியாக அறிவித்தார், அதாவது அவன் தேவனுடைய வார்த்தையைத்தான் பிரசங்கிக்கிறான் என்று. ---சாட்சியாக அறிவித்திருக்கிறான்... வசனத்தை குறித்து... இயேசுகிறிஸ்துவை பற்றிய சாட்சியை குறித்தும்... தான் கண்ட யாவற்றையும். இதை வாசிக்கிறவன் பாக்கியவான்... (ஆங்கிலத்தில் உள்ளபடி மொழிபெயர்ப்பு) 77. எத்தனை பேருக்கு ஆசீர்வாதம் வேண்டும்? அப்படியானால் அதை வாசியுங்கள்! அது அற்புதமல்லவா? இந்த தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது. 78. ஓ, என்னே, நாம் இப்பொழுது சரியாக அதை பற்றி பார்ப் போமானால்! பாருங்கள்! எப்பொழுது காலம் சமீபமாயிருக்கிறது? இயேசு கிறிஸ்துவை பற்றிய வெளிப்பாடு கிறிஸ்துவின் சரீரத்திற்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கும் போதே. மேலும் கிறிஸ்து வெளிப்படுத்தப் பட்டிருக்கிறார், மரித்தவராய் அல்ல, ஆனால் உயிரோடிருக்கிறவராய், தன்னுடைய சபையில் ஜீவிக்கிறவராய், அவர் செய்த அதே காரியங்களை செய்கிறவராய், அதே ஊழியத்தை, அதே சுவிசேஷத்தை, அதே அடையாளத்தை, உயிர்த்தெழுந்த கிறிஸ்துவாய். அவர் தன்னுடைய தூதன் மூலமாய் சபைக்கு வெளிப்படுத்தப் படும்போது, அப்பொழுது காலம் சமீபமாயிருக்கிறது. இந்த கடந்த சில வருடங்களாக இயேசு கிறிஸ்துவை பற்றிய பரமரகசியம் போல, அன்றிலிருந்து இன்று வரை, ஒருபோதும் இருந்ததில்லை. வெளிப்படுத்தப்பட்டது அப்படியானால், காலம் சமீபமாயிருக்கிறது! 79. உலகத்தை அதினுடைய இயற்கையான தன்மையில் கவனித்து பாருங்கள். அணுசக்தி, ஹைட்ரஜன், கோபால்ட், எல்லா வெடி குண்டுகளும், அவர்களிடம் இருக்கும் மற்றவைகளும்; முழு உலகமும் நடுங்கிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொன்றுமே ஆட்டங் கண்டு, நடுங்கிக் கொண்டிருக்கிறது. முழு இயற்கையும் தவித்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் அதை அறிவீர்கள். நான் அதை அறிவேன். பென்டகான் (pentagon) அதை அறியும். ரஷ்யா அதை அறியும். இங்கிலாந்து அதை அறியும். உலகமே அதை அறியும். காலம் சமீபமாயிருக்கிறது! இயற்கையானது நடுங்கிக் கொண்டிருக்கும் விதத்தில் அதை நடுங்க செய்வது எது? ஏனெனில் காலம் சமீபமாயிருக்கிறது! 80. சுத்தமான, பரிசுத்தமான, கலப்படமில்லாத தேவனுடைய வார்த்தைக்காக இஸ்ரவேல் தன்னுடைய ஸ்தானத்தில் நின்ற போது, இந்த சபையின் விடுதலை, இஸ்ரவேலுடைய விடுதலைக்கு ஒரு பரிபூரண மாதிரியாயிருக்கிறது. அது நின்று தன்னு அணிவகுப்பை செய்யப்போகிறது. மோசே இஸ்ரவேல் பிள்ளைகளை வழி நடத்தினான்; கொஞ்சம் அப்பத்துடனும், அவர்கள் தலை மீது கோஷேர் அப்பத்துக்கான பிசைந்த மாவுடனும் அவர்கள் சிவந்த சமுத்திரத்திற்கு அணிவகுத்து சென்றனர். தேவனுடைய பாதை அவர்களை சரியாக சிவந்த சமுத்திரத் தண்டை வழிநடத்தியது. "நல்லது", அவன், "இப்பொழுது நாம் எப்படி கடக்கபோகிறோம்?" என்றான். 81. யாரோ ஒருவன் பின்னாக பார்த்து கூறினான், "பாருங்கள், தூரத்தில் வருகிறார்கள், தூசி பறக்கிறது. ஆயிரமடங்கு ஆயிரமான பார்வோனின் ரதங்கள் நம்மை பின் தொடர்ந்து வருகிறார்கள்!" அவர்களுடன் சென்ற அந்த கலப்பு கூட்டம், கலக்கமடையவும் நடுங்கவும் ஆரம்பித்தார்கள், அவர்கள் அப்படியே தொடர்ந்து வந்து, கடைசியில் கோரா எதிர்த்து பேசின பாவத்தில் வந்து அழிந்தார்கள். இதுவரை நீங்கள் பார்த்திராத மிகவும் கொடூரமான இரத்த வெள்ளம் ஓடப்போகிற படுகொலையை பார்க்க போவதால் குன்றுகளின் அஸ்திபாரமே ஆட்டங்கண்டது என்பதில் சந்தேகம் இல்லை. ஒரு பரிதாபமான, சிறிய, உதவியில்லாத ஜனக்கூட்டம் அங்கே சமுத்திரத்தின் ஓரத்தில் நின்றிருந்தது. சிறு பிள்ளைகள் தங்கள் அம்மாவின் பின்னாக சென்று அவர்களின் துணியை பிடித்துக் கொண்டனர். பரிதாபமான வயதான தகப்பன்கள் தங்கள் மகன்களின் மீது சாய்ந்துகொண்டு, அழுதபடியே, கூறினார்கள், "மகனே, என்னுடைய நாட்களை நான் வாழ்ந்துவிட்டேன், ஆனால் நீ மரிக்க போவதை பார்க்க நான் வெறுக்கிறேன். பார், தூரத்தில் வருகிறார்கள்!". மரணத்திற்கு பயப்படும் முழு இயற்கையும், பூக்களும், மரங்களும் கூட மற்றும் மீதி இருக்கும் ஒவ்வொன்றுமே, மரணத்திற்கு பயந்தது. இயற்கையானது நடுநடுங்கி, வேதனை குரல் எழுப்பி, தன் காலில் உதரல்கொண்டது, அந்த படுபயங்கரமான படுகொலை வரப்போவதை பார்த்ததால். 82. தேவன் என்ன செய்துகொண்டிருந்தார்? ஆனால் அவர்கள் எல்லா நேரங்களிலும், தேவனுடைய அந்த ஒளிவட்டத்தை (Halo), இயற்கைக்கு மேம்பட்ட வல்லமை சரியாக அங்கே தரித்து நின்றதை. அக்கினி ஸ்தம்பமானது அங்கே தொங்கி கொண்டிருந்ததை, அது அவர்களுக்கும் அந்த எதிரிகளுக்கும் நடுவே நிற்க வேண்டிய நேரம் வரும்போது நிற்கும், என்பதை புரிந்து கொள்ள தவறினார்கள். 83. இயற்கை நடுங்கியது. சமுத்திரம் பதட்டப்பட ஆரம்பித்தது. சந்திரன் கீழே நோக்கி பார்த்து நடுங்கியது. பறவைகள் காட்சியை விட்டே பறந்து விட்டன. மிருகங்கள் பின்னாடி ஓடிவிட்டன. "ஓ. என்னே ஒரு முடிவில்லா கொலை! அந்த லட்சக்கணக்கான ஜனங்கள் இன்னும் கொஞ்ச நிமிடங்களில் மரிக்க போகிறார்கள்" அவர்கள் அனைவரும் தவித்து கொண்டிருந்தார்கள். 84. ஆனால் அவர்கள் என்ன செய்துக்கொண்டிருந்தார்கள்? அவர்கள் தேவனுடைய பாதையை பின்தொடர்ந்து கொண்டிருந்தார்கள். அது முட்டாள்தனம் போன்றிருந்தது, அது பயித்தியக்காரத்தனம் போன்றிருந்தது, ஆனால் அவர்களோ ஒளியில் நடந்துக் கொண்டி ருந்தார்கள். ஆமென். ஓ! ஒளியில் நடப்பது! நாம் அந்த பாடலை பாடுவது உங்களுக்கு நினைவிருக்கிறதா? நாம் ஒளியில் நடப்போம், அது அழகான ஒளி, அதிலிருந்து வரும் இரக்கத்தின் பனித்துளிகள் பிரகாசமானவை: இரவிலும், பகலிலும் நம்மைச் சுற்றிலும் பிரகாசிக்கும், யேசுவே, உலகத்தின் ஒளி. 85. அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்திருக்கிறார். அவர் இங்கே நமக்கு முன்பாக இருக்கிறார். அவர் விழுந்துபோகாத அடையாளங்களையும், அற்புதங்களையும் காண்பிக்கிறார் ஏதோ மூடபக்தியானவைகளை காண்பிக்கவில்லை; ஆனால் வேதாகம த்திலிருக்கும் அடையாளங்களையும் அற்புதங்களையும் காண்பிக் கிறார், அதாவது அவர் நம்மோடு இருக்கிறார் என்றும் அவர் நம்மை வழிநடத்துகிறார் என்பதற்காகவும் காண்பிக்கிறார். நாம் ஒரு இடத்திற்கு வந்து கொண்டிருக்கிறோம். 86. அணுகுண்டுகள் தயாராயிருக்கின்றன. கோபால்ட் குண்டுகள் தயாராயிருக்கின்றன. ஓ. என்னே! எல்லா பல்வேறுபட்ட ஸ்தாப னங்களையும் நிறுத்திவிட்டு, சிறந்த, பெரிய பிராடஸ்டன்ட் சுவிசேஷ சபையாக ஒருங்கிணைக்க வேண்டுமென்றும், அது கத்தோலிக் கத்துடன் சேர்ந்து கம்யுனிஸத்திற்கு எதிராக சண்டையிட ஒத்துழைக்கும் என்கிற பொது அறிவிப்பு எழுந்துகொண்டிருக்கிறது. ஆம், ஐயா! தேவன் ஒருபோதும் சபையையும் அரசாங்கத்தையும் ஒன்று சேர்க்கவே இல்லை. தேவன் தம்முடைய சபையை நடத்துகிறார். அரசியல் தலைவர்கள் அவர்களை நடத்த வேண்டுமென்று அவர் எதிர்பார்ப்பதில்லை, சபை அரசியலை கூட தேவனுடைய ஆவியால் பிறந்த ஒவ்வொரு மனிதனும் சுதந்திரமாயிருக்கிறான். ஆமென். 87. அவர்கள் இங்கே, இப்பொழுது சரியாக முடிவில் இருக்கிறார்கள். ஜனங்கள் சுற்றிமுற்றி பார்க்க ஆரம்பித்து, "சரி, நாம் என்ன செய்வது? நாம் என்ன செய்வது?" என்றனர், ஓ, "நாம் என்ன செய்வது?" என்று கூறுவது எவ்வளவு முட்டாள் தனமாயிருக்கிறது, வழிநடத்தி கொண்டிருக்கும் அவரை நோக்கிப்பாருங்கள். ஆமென். 88. நாம் என்ன செய்யபோகிறோம்? முப்பது வயதை கடந்த சகோதரனே. நரைத்த தலைமுடியுடன், கணவனின் பக்கத்தில் அமர்ந்திருக்கும் சகோதரியே. வியாதியுடனும் வேதனையுடனும் இருப்பவர்களே. நீங்கள் உங்கள் கையை பார்க்கலாம். ஒவ்வொரு முறையும் நீங்கள் மற்றவர்களை பார்க்கும்போது, ஒரு காரியம் நிச்சயமாக நடக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள், நீங்கள் மரிக்க போகிறீர்கள். ஒவ்வொரு முறையும் சாலையில் ஆம்புலன்ஸ் செல்வதை நீங்கள் கேட்கும்போது, "மரணம் உனக்கு முன்னே இருக்கிறது" என்று அது பேசுகிறது. ஒவ்வொரு முறையும் நீங்கள் கல்லறை தோட்டத்தை கடக்கும் போது ஒரு கல்லறையை பார்த்தால், அது கூறுகிறது "மரணம் உனக்கு முன்னே இருக்கிறது". ஒவ்வொரு முறையும் உங்கள் முகத்தில் சுருக்கம் வருவதை அல்லது ஒரு நரைத்த முடியை அல்லது சரிந்த தோள்பட்டையை பார்க்கும்போது, அது கூறுகிறது, "மரணம் உனக்கு முன்னே இருக்கிறது". ஓ, ஆனால் ஒரு கிறிஸ்தவனால் எவ்வளவு மகிழ்ச்சியாய் அந்த சிவந்த சமுத்திரத்தின் ஓரமாக நிற்க முடியும்! 89. மோசே தன் முகத்தை தேவனுக்கு நேராக திருப்பி, அவன் ஜெபிக்க ஆரம்பித்தான்! அந்த அக்கினி ஸ்தம்பம் இறங்கி வந்து, அவர்களுக்கும் அந்த ஆபத்திற்கும் நடுவில் நின்றது. அவர்களுக்கோ இருளாயிருந்தது; நீங்கள் ஒளியை மறுத்தால், ஒவ்வொரு முறையும் அது இருளாக மாறிவிடும். அது அவர்களுக்கோ இருளாயிருந்தது; ஆனால் இவர்களுக்கோ அது முன்னேறி செல்லுங்கள் என்று கூறும் அணிவகுப்பின் கட்டளையாயிருந்தது. அவர்கள் சமுத்திரத்தண்டை சென்றபோது, அந்த சமுத்திரம் திறவுண்டது. அவர்கள் இருந்த அதே திசையிலிருந்து ஒரு பெருங்கீழ் (east wind) காற்று வீசியது, பார்வோனின் தலைக்கு மேலாக வீசி, கீழே வந்து அந்த சமுத்திரத்தை பின்னிட்டு ஓடச்செய்தது. அந்த சமுத்திரம் பயந்தது ஏனெனில் தேவன் அதன் மூலமாக ஒரு பாதையை வகுத்திருந்தார். தேவன் தம்முடைய அன்பை தம்முடைய பிள்ளைகளுக்கு காண்பித்துக்கொண்டிருந்தார். ஒருசில நேரங்களில் நீங்கள் ஒரு இக்கட்டான நிலைக்கு செல்ல அவர் விரும்புகிறார். எதற்கெனில் அவர் தன்னைதானே வெளிப் படுத்துவதற்காக. ஒரு மேய்ப்பன் ஒருமுறை கூறியது போல, அவன் "ஆட்டின் காலை உடைத்தான்" என்றான். "எதற்காக அதை செய்தாய்?" என்றேன். 90. கூறினான், "அப்படி செய்யும்போது என்னால் அதை போஷிக்க முடியும், அதை நேசிக்க முடியும், நான் அதை நேசிக்கிறேன் என்பதை அதனிடம் நிரூபிக்க முடியும்." அதுதான் காரணம். "அப்பொழுது அது என்னை பின்தொடரும்" என்றான். சீக்கிரத்தில் சம்பவிக்க வேண்டியவைகளை; தன்னுடைய கரத்தால் வெளிப்படுத்தும்படி. யோவான் ஆசியாவிலுள்ள ஏழுசபைகளுக்கும் எழுதுகிறதாவது; உங்களுக்கு கிருபை உண்டாவதாக, சமாதானம் பெருகுவதாக (ஓ, என்னே), இருக்கிறவரும்.... இருந்தவரும் வருகிறவருமானவராலும்... (ஆங்கிலத்தில் உள்ளபடி மொழிபெயர்ப்பு) 91. இயேசு! மூன்று காரியங்களை கவனியுங்கள், "இருந்தவரும், இருக்கிறவரும், வருகிறவருமானவராலும்; நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்". சிறிது நேரம் கழித்து, வேதவாக்கியத்தில், அடுத்த அதிகாரத்தில், அவர் கூறினார்... இதே அதிகாரத்தில், அவர் கூறினார்: நான்... மரித்தேன், ஆனாலும், இதோ சதாகாலங்களிலும் உயி ரோடிருக்கிறேன்... திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்... (ஆங்கிலத்தில் உள்ளபடி மொழிபெயர்ப்பு) ஏதோ சபையோ, பேதுருவோ அல்லது ரோமிலிருக்கும் அவனுடைய தேவாலயமோ, அல்லது எபிஸ்கோபோலியனோ அல்லது யாராக இருந்தாலும், அவர்களிடம் திறவுகோல் இல்லை. அதுதான் ஐக்கியத்திற்கான திறவுகோல். ஆனால் நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன். ஆமென். 92. ஓ, இன்றைக்கு நீ அவரை நேசிக்கவில்லையா? உன்னுடைய சந்தோஷத்திற்கான திறவுகோல் அவரிடமிருக்கிறது, உன்னுடைய மகிழ்ச்சிக்கான திறவுகோல் அவரிடமிருக்கிறது, கல்லறையிலிருந்து உன்னுடைய விடுதலைக்கான திறவுகோல் அவரிடமிருக்கிறது. "நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குரிய (hell), நரகத்திற்குரிய (Hades) திறவு கோலை உடையவராயிருக்கிறேன். என்னால் இயற்கைக்கு மேம்பட்டதை (super natural) திறக்க முடியும், என்னால் இயற்கைக் குட்பட்டதை (natrual) திறக்க முடியும். மரணத்திற்கும் பாதளத்திற்குரிய திறவுகோலை என்னுடைய கையில் நான் வைத்திருக்கிறேன்". ஒ. அங்கே ஒரு ஊற்று திறக்கப்பட்டிருக்கிறது! வந்து ஜீவ தண்ணீர்களை இலவசமாக எடுத்துக்கொள்ளுங்கள்! இம்மானுவேலின் இரத்தத்தால் நிறைந்த ஓர் ஊற்றுண்டு, பாவியானவன் பெருக்கெடுத்து வரும் அவ்வூற்றில் மூழ்கு போது, எல்லா பாவக்கரைகளும் நீங்கிவிடுகின்றன. 93. நீ அதிலிருந்து திரும்பி வந்தவுடன், சகோதரனே, நீ ஒரு ரபியின், சமயகுருவின் அல்லது ஒரு பிரசங்கியாரின் வார்த்தையை எடுத்துக்கொள்ள தேவையில்லை. உன்னுடைய இருதயத்திற்குள் ஏதோவொன்று உன்னை அந்த ஐக்கியத்திற்குள் கனிய செய்து, ஏதோவொன்று அந்த எல்லா பழைய காரியங்களையும் ஒழிந்துபோக செய்து, காரியங்களை புதிதாக்கியது. உன்னை நேசித்த ஏதோவொன்று அங்கிருக்கிறது, அது உன்னுடைய இருதயத்தில் இருக்கும் ஏதோவொன்றாயிருக்கிறது. பவுல் கூறினான், "நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், வியாதியா யிருந்தாலும் அல்லது நாசமோசமானாலும், எதுவானாலும் கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பை விட்டு நம்மை பிரிக்கமாட்டாது'. புறம் பேசுவதானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், எதுவாக இருந்தாலும், கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பை விட்டு நம்மை ஒரு போதும் பிரிக்க முடியாது. வியாதியோ, கவலையோ, பசியோ, சண்டையோ, சபையிலிருக்கும் வேறுபாடுகளோ, கருத்து வேறுபாடுகளோ, அது எதுவாக இருந்தாலும் பொருட்டல்ல, எதினாலும் உன்னை தேவனுடைய அன்பைவிட்டு ஒருபோதும் பிரிக்கவே முடியாது. 94. நாம் ஜெபிக்கும்போது, இன்றைக்கு நீ மூழ்க விரும்பவில்லையா? ஒரு சிறிய ஜெபத்திற்காக நம்முடைய தலைகளை தாழ்த்தியிருக்கிற வேளையிலே, இந்த சகோதரி, ஒரு நிமிடம் இங்கே வருவீர்களா. ஜெபிப்பதற்கு முன்பு, இந்த சபையிலே, இந்த காலை வேளையில் இருக்கும் இந்த சிறிய கூட்டம், "சகோதரன் பிரன்ஹாமே, என்னுடைய கையை நான் உயர்த்துகிறேன், என்னை நினைவுகூரும்" என்று சொல்வார்களா என்று நான் வியக்கிறேன். 95. இந்த காலை வேளையில் நான் செய்தியை நிறுத்த வேண்டிய தாயிற்று, நான் அப்படி செய்ததற்காக என்னை மன்னிக்கவும். ஆனால் சிறிது நிமிடங்களே இருக்கின்றது, 'ஏனெனில் கொஞ்ச நேரத்தில் நான் இன்னொரு இடத்தில் இருக்க வேண்டும். இன்னொரு ஆராதனை கூட்டம் இருக்கிறது, நான் உடனே செல்ல வேண்டும். செல்வதற்கு முன்பு நான் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்க விரும்புகிறேன். 96. ஆனால் நீ இங்கே இருக்கும் வேளையில், நீ உறுதிகொண்டாயா? நீ நிஜமாகவே மரணத்தை விட்டு நீங்கலாகி ஜீவனுக்குட்பட்டாயா? உன்னுடைய பெயர் உண்மையாகவே, நான் என்ன கூறுகிறேன் என்றால், உண்மையாகவே நினைவுக்கூறப்பட்டதா? இன்றைக்கு அது தேவனுடைய புஸ்தகத்தில் இருக்கிறதா? மேலும், ஓ, நீ தேவனோடு சமாதானமாயிருக்கிறாயா? உலகமும் மற்றும் எல்லா பழைய காரியங்களும் ஒழிந்து, ஒவ்வொன்றும் புதியவைகள் ஆனதா? உலகம் தரமுடியாத, ஒரு உண்மையான, இராஜரீகமான, ஐஸ்வரியமான, சகோதரத்துவமான, தெய்வீகமான ஏதோவொன்று உன்னுடைய இருதயத்தில் இருக்கிறது என்பதை நீ அறிந்தாயா? நீ பாவிகளை மிக அதிகமாக நேசிக்கிறாயா. அதாவது நீ அவர்களுடன் பேசும்போது நீ அவர்களில் ஒருவனாக ஆகிவிடுகிறாயா? பவுல் கூறினான், தேவன் மட்டும் தன்னுடைய பாவியான சில நண்பர்களை இரட்சித்தால்; வேறு வார்த்தைகளில் கூறினால், அவனுடைய ஜனங்களை, அவனுக்கு எதிராக இருந்த அந்த யூதர்களை இரட்சித்தால், தன்னுடைய ஜீவனையே தருவதாக, தானே ஆகாதவனாக இருப்பதாக கூறினான். நண்பனே, அது போன்ற ஒரு மார்க்கத்தில் (Religion) தான் நீ இருக்கிறாயா? அப்படி இல்லையென்றால், ஒரு ஊற்றுண்டு. அது முழுவதுமாக இம்மானுவேலின் இரத்த நாளங்களில் இருந்து எடுக்கப்பட்ட இரத்தத்தினால் நிரப்பப்பட்டிருக்கிறது. விசுவாசத்தின் மூலமாக, அந்த வழியில் மட்டும் தான் உங்களால் அதை செய்யமுடியும், அங்கே பாவிகள் அந்த பெருக்கெடுத்து வரும் ஆற்றின் (flood) கீழ் தங்கள் ஆத்துமாக்களை மூழ்க்குகின்றார்கள். அது தேவனுடைய கிரியையாய் இருக்கிறது. (ஒலிநாடாவில் காலியிடம் ஆசி) என்ன நடந்தது? உங்களுடைய எல்லா பாவக்கரைகளையும் இழந்துவிடுவீர்கள். பார்வோனின் சேனை இஸ்ரவேலுக்கு பின்னாக விடப்பட்டது போல, அவை எல்லாம் உங்களுக்கு பின்னாக விடப்பட்டிருக்கும். 97. உணர்ச்சிவசங்களை பின்பற்றாதீர்கள். போதனையை, போத னைகளை பின்பற்றுங்கள். மோசே மாத்திரம் ஜனங்களின் உணர்ச்சிவசங்களை பின்பற்றியிருந்தால், அவர்கள் கத்தி கூச்சலிட்டபடி, மலைகளில் சிதறி ஓடியிருப்பார்கள் மேலும் பார்வோனின் சேனை அவர்களை பிடித்திருக்கும். ஆனால் அவர்கள் போத பின்பற்றினார்கள். தேவன் கூறினார், "இப்பொழுது நீங்கள் தரித்திருந்து தேவனுடைய மகிமையை பாருங்கள். வெறுமனே தரித்து நில்லுங்கள். நீங்கள் அதை பரபரப்பாக்க தேவையில்லை. தரித்திருந்து தேவனுடைய மகிமையை பாருங்கள். ஏனெனில், இந்த நாளில் தேவன் யுத்தம் பண்ணுவார், நீங்கள் சும்மாயிருப்பீர்கள்". அவர்கள் சமுத்திரத்தை நடந்த படியே கடந்தார்கள். பின்பு அந்த விருத்தசேதன மில்லாதவர்கள், அந்த ஆள்மாறாட்டகாரர்களும், சமுத்திரத்தை கடக்க முயற் சித்து, சமுத்திரத்தில் மூழ்கினார்கள். 98. பிதாவாகிய தேவனே, இந்த காலை வேளையில் இந்த சின்ன சிறிய மந்தை இங்கே இருக்கிறது. ஆனால் உண்மையான மனிதர்களும் பெண்களும் இங்கே அமர்ந்திருக்கின்றனர் அவர்கள் உம்முடைய பிள்ளைகள், அவர்கள் உம்மை விசுவாசித்து உம்மை நேசிக்கிறார்கள். தேவனே, அவர்களுக்காக நான் ஜெபிக்கிறேன். ஒருவேளை அவர்களில் சிலர் உம்மை இன்னும் ஏற்றுகொள்ளாமல் இருக்கலாம், உலகத்தின் பழைய மாம்சிக காரியங்களுக்கு மரித்து போகும் உண்மையான அனுபவம் அவர்களுக்கு ஒரு போதும் கிடைக்காமல் இருந்திருக்கலாம், வெறும் சபை அறிக் கையினால் அவர்கள் ஜீவித்திருக்க கூடும், அவர்கள் ஜனங்களிடம் கூறியிருக்கலாம் மேலும் மற்றவர்களிடம் கூறியிருக்கலாம். ஒருவேளை அவர்கள் கிறிஸ்தவ சட்டத்தின்படி ஞானஸ்நானம் பெற்றிருக்கலாம் அல்லது ஏதோவொன்றை, ஆனால் ஒருபோதும் இன்னமுமாக இரட்சிக்கப்படாமல் இருக்கலாம். உண்மையாக அது என்னவென்பதை அவர்கள் அறியவில்லை. ஒருவேளை அவர்கள் மனதளவில் உணர்ச்சிவசப்பட்டு, அறிவு சார்ந்த கிறிஸ்தவர்களாயிருந்து, ஒரு வேதபாடசாலையின் மூலமாக, தாங்கள் சரியாகதான் இருக்கிறோம் என்று நினைத்திருக்கலாம்; அங்கே, "மனிதருக்கு தோன்றுகிற செம்மையான வழிகள் உண்டு." பார்ப் பதற்கு அது சரியென்றும், நீங்கள் அதை பெற்றுகொண்டதை போன்றும் இருக்கலாம், "ஆனால் அவைகளின் முடிவோ மரண வழிகளாயிருக்கிறது". 99. தேவனே, ஒவ்வொரு மனிதனும், பெண்ணும், பையனும் அல்லது பெண்பிள்ளையும், இந்த நேரத்தில் அவர்களுடைய இருதயத்தை சோதிக்கட்டும்; அவர்கள் சோதிக்கவேண்டாம். ஆனால் பரிசுத்த ஆவியானவர் அவர்களை சோதித்துப் பார்க்கட்டும். அவர்கள் தங்களுடைய இருதயத்தில் முடிவு செய்தால், "ஆம், நான் தவறாயிருந்தேன் என்று நான் நம்புகிறேன். அந்த இடத்திற்கு நான் இன்னும் வரவில்லை, அந்த எல்லா காரியங்களும் ஒழிந்துபோகும் இடத்திற்கு. நீர் என்னுடைய இருதயத்தை தட்டிகொண்டிருக்கும் வேளையில், இப்பொழுது, நான், பிதாவே, எனக்கு உதவியாயி ருக்கும்படி, உம்மை இப்பொழுது ஏற்றுக் கொள்கிறேன். நீர் இன்னமுமாக என்னை அழைக்கிறீர் இல்லையென்றால் இந்தவிதமாக நீர் என்னோடு பேசியிருக்க மாட்டீர்". மேலும் அவர்கள் தங்களுடைய கரங்களை உயர்த்தட்டும், என்னிடமாக அல்ல; ஆனால் உம்மிடமாக உயர்த்தட்டும். கரங்களை உயர்த்தும்போது, கூறுங்கள், "இந்த நாள் முதற்கொண்டு, கர்த்தாவே, என்னை நானே சுயத்தை-மறுக்கும் நதியண்டைக்கு கொண்டு செல்கிறேன். என்னை நானே மரணம் எனும் நதியண்டைக்கு கொண்டு செல்கிறேன். என்னில் தவறாக இருக்கும் ஒவ்வொரு கறைகளையும் இழந்துபோக நான் அதில் மூழ்குகிறேன்; என்னுடைய எல்லா பழக்கங்களையும், அசுத்தங்களையும், என்னுடைய எண்ணங் களையும், என்னுடைய எல்லா வேறுபாடுகளையும், என்னுடைய சண்டைகளையும், வாதங் களையும், கோபங்களையும், மேலும்- மேலும் இந்த எல்லா காரியங்களையும், அவை எல்லாவற்றையும் அந்த பெருக்கெடுத்து வரும் ஆற்றின் கீழாக நான் மூழ்க்குகிறேன், அதாவது, நான் மேலே வரும்போது, நான் எப்படி இருக்கவேண்டுமென்று சுவிசேஷம் கூறியதோ அவ்வாறே நான் உணர விரும்புகிறேன்: சுத்தமாக, தயாராக, ஒரு கள்ளங் கபடம் இல்லாத இருதயத்துடன், சக மனிதனுக்கான உண்மையான அன்புடன். அவர்கள் எவ்வளவு கொடூரமாக இருந்தாலும் பரவாயில்லை, நான் அவர்களை இன்னமுமாக நேசிப்பேன். நீர் அன்புகாட்டுவது போல நானும் என் எதிரிகள் மீது அன்பு காட்டும் வரை, உம்முடன் நான் ஐக்கியத்தில் நுழைய விரும்புகிறேன்; கர்த்தாவே, அதை உண்மையாக அறிந்துகொள்ளும்படியாக. ஏனெனில், இப்பொழுது நாம் அதனுடன் விளையாட முடியாது, காலதாமதம் ஆகிவிட்டது. இன்றைக்கு பிறகு நாம் ஒருவேளை இல்லாமல் போய்விடலாம். இப்பொழுதிலிருந்து சரியாக இன்னும் ஐந்து நிமிடங்களில் நாம் இல்லாமல் போய் விடலாம், நமக்கு ஒருபோதும் இன்னொரு வாய்ப்பு கிடைக்காது. மேலும் தேவனே, இந்த சிறிய சபையில் அமர்ந்தவாறு, மனிதர்களும் பெண்களும் இதைப்பற்றி உத்தமமாக சிந்திக்கட்டும். இதை நாங்கள் கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம். 100. உங்களுடைய தலைகள் தாழ்த்தியிருக்கிற வேளையிலே, யாரேனும் உங்களுடைய கரத்தை உயர்த்தி, "தேவனே, என்னை நினைத்தருளும், உம்முடனான அந்த அனுபவத்தை பெற்றுக் கொள்ள விரும்புகிறவன் நான்தான். என்னுடைய கரத்தை நான் உயர்த்துகிறேன்" என்று கூறுவார்களா என்று நான் வியக்கிறேன். இப்பொழுது, அந்த உண்மையான நேர்மறை (positive) உறுதியில் லாதவர்கள், உங்களுடைய கரத்தை சற்றே உயர்த்துங்கள். தேவன் உங்களையும் ஆசீர்வதிப்பாராக. சீமாட்டியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது, அதை பெற்றேன் என்கிற நிச்சயம் இல்லாத ஒவ்வொருவரும். ஐயா, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது ஏதோவொன்று... என் சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப் பாராக. என் சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் நிச்சயமான உறுதியுடன் இல்லையா... பாருங்கள் - பாருங்கள் எப்பொழுதெல்லாம் நீங்கள் அதினூடாக செல்கிறீர்களோ, சகோதரனே, சுபாவமானது, நீங்கள் முழுவதுமாக மாற்றப் பட்டிருக்கிறீர்கள். "ஓ, ஆம், சகோதரன் பிரன்ஹாமே, நான் விசுவாசிக்கிறேன்," 101.ஆனால் அது ஒரு அறிவுசார்ந்த செய்கையாய் இருக்குமானால், நீ விசுவாசிக்கிறாய் ஏனெனில் விசுவாசிப்பதற்கு உனக்கு சிந்தையிருக்கிறது. இப்பொழுது நான் அதை பற்றி பேசவில்லை. நான் கூறுவது என்னவென்றால், நீ உண்மையாகவே இரட்சிக்கப் பட்டிருக்கிறாய், நீ தேவனுடைய நித்திய அன்பினால் முத்திரை போடப்பட்டிருக்கிறாய், அதாவது உனக்கு பிடிக்காத (unlovely) ஜனங்களையும் உன்னால் நேசிக்க முடியும், அதுபோன்ற ஒரு சூழலில் அவர்களுக்கு முன்பாக நீ நின்று, வெறியினால் (fanatics) அல்ல அல்லது வெறிதனத்தினால் (fanaticism) அல்ல, மாறாக ஆனால் ஒரு உண்மையான இருதயத்துடன், அவன் அதை உணரும்படியாக, அவனுடைய கரங்களை பிடி. நீ நடிக்கிறாயா அல்லது இல்லையா என்று அவனுக்கு தெரியும். அவனுடைய கரத்தை பிடித்து, கூறு, "அன்பான நெஞ்சார்ந்த சகோதரனே. நான் - நான் - நான் தவறாயிருந்தேன். நீ - நீ என்னை மன்னிக்கும்படி நான் வேண்டுகிறேன். நான் - நான் உன்னை நேசிக்கிறேன்." அதுபோன்ற ஒரு மனோபாங்கில் (attitude), உன்னுடைய இருதயத்திலிருந்து உன்னால் உண்மையாகவே செய்ய முடியுமா? உன்னால் முடியுமா? அவரை சேவிக்கும்படியாக, உன்னால் எல்லா உலக காரியங்களையும் ஓரமாக வைக்க முடியுமா? அவர் உன்னுடைய ஜீவியத்தில் முதல் இடத்தில் இருக்கிறாரா? அப்படியிருந்தால், உனக்கு ஆசீர்வாதம், மேலும் அவருடைய ஆசீர்வாதங்கள் உன் மீது இருக்கும். அப்படி இல்லையென்றால், இப்பொழுதே அவரை ஏற்றுக்கொள், அவர் உன்னை ஆசீர்வதிப்பார், மேலும் அவருடைய ஆசீர்வாதங்கள் உன் மீது இருக்கும். அவர் உன்னை பார்த்து புன்னகைக்க வேண்டுமென்று நீ விரும்பமாட்டாயா? உலகத்தில் இருக்கும் ஒவ்வொரு நபரும் என்னை வெறுத்தாலும், அவர் என்னை பார்த்து புன்னகைக்க வேண்டுமென்றே விரும்புவேன். நிச்சயமாக, நான் விசுவாசிக்கிறேன், அவர் என்னை பார்த்து புன்னகைத்து, என்னை நேசித்தால், ஜனங்களும் என்னை நேசிப் பார்கள்; அவருடைய பிள்ளைகள் அனைவரும் என்னை நேசிப் பார்கள். மேலும் அவர் செய்தது போலவே, நானும் வெறுக்கத்தக் கவர்களையும் (unlovely) நேசிக்கும் அளவிற்கு அவர் என்னை அப்படியான ஒரு நிலைக்கு கொண்டுவருவார், 'ஏனெனில் அவருடைய ஆவி எனக்குள் இருக்கும். 102. இன்னும் ஒரு விசை, நாம் ஜெபிப்பதற்கு முன்பு. கரங்களை உயர்த்தாதவர்கள் யாரேனும் இருந்து, இந்த ஜெபத்தில் நினைவு கூரப்பட வேண்டுமென்று விரும்பினால், உங்களுடைய கரத்தை உயர்த்துவீர்களா. சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பார். சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பார். சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பார். சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பார். சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பார். சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பார். அது சரி. எல்லாம் சரி. சிறு பையனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பார். இப்பொழுது, அவர் உங்களை காண்கிறார். இந்த காலை வேளையில் ஒரு பதிவானது செய்யபட்டிருக்கிறது. 103.நீங்கள் என்னுடைய வார்த்தைகளை குறித்து வைத்துக் கொள் ளுங்கள். நீங்கள் என்னை வகைப்படுத்தினால், அதாவது, கனத்து டனும் அன்புடனும் நீங்கள் அதை கூறுகிறீர்கள், நீங்கள் என்னை தேவனுடைய ஞானதிருஷ்டிகாரனாக வகைபடுத்தினால், நினைவில் கொள்ளுங்கள், இது பரலோகத்தில் இருக்கும் புஸ்தகங்களில் இருக்கிறது. அவர் இருக்கிறார். அந்த காணக்கூடாத (unseen) உலகம் எல்லா நேரங்களிலும் உங்களுடன்கூட இருக்கிறது என்கிற உணர்வு நிலையுடன் (conscious) ஜீவிக்க நீங்கள் விரும்பவில்லையா? நீங்கள் இங்கிருந்து வெளியே சென்று உங்களுடைய காரில் ஏறும்போது, தூதர்கள் உங்களுக்கு பக்கத்தில் தங்களுடைய இடங்களிலே நிற்கிறார்கள் என்பதை உணருவதற்கு, உங்களுக்கு மிகவும் பிடிக்காமல் இருக்கும். அந்த மனிதனிடம் நீங்கள் நடந்து செல்லும்போது, பரிசுத்த ஆவியானவர் சரியாக உங்கள் மேலே நிற்கிறார் மேலும் தூதர்கள் உங்களை சுற்றி இருக்கிறார்கள். 'சகோதரன் பிரன்ஹாமே, அது சரியா?" 104.வேதாகமம் அப்படிதான் கூறியிருக்கிறது. "தேவ தூதர்கள் அவர்களை சூழ்ந்திருக்கிறார்கள், பாளயமிறங்கியிருக்கிறார்கள்". அவர்கள் பரலோகத்திற்கு திரும்பி செல்வதில்லை; அவர்கள் கூடாரமிட்டிருக்கிறார்கள். உங்களை ஜீவியத்தின் பாதையினூடாக பார்த்துக்கொள்ளும்படி அவர்கள் ஒரு குறிக்கோளோடு அனுப்பப் பட்டிருக்கிறார்கள். ஓ. அது அருமையானதல்லவா? 105.இப்பொழுது, பரலோக பிதாவே, நேரம் எங்களை அனுமதிக்காது, உம்முடைய ஆவி எங்களை சுற்றி நகர்வதை நாங்கள் உணருகிறோம். நாங்கள் உம்மை நேசிக்கிறோம், ஏனெனில் பரிசுத்த ஆவியானவர் வார்த்தையை நேசிக்கிறார். அவர் வார்த்தையில் வந்து, அவரே வார்த்தையை எடுத்து அதை வெளிப்படுத்துகிறார், அதை திறந்து கொடுக்கிறார். வேறுவிதமாக கூறினால், தன்னுடைய வார்த்தையின் மூலமாக அவர் இயேசுவை வெளிப்படுத்துகிறார். ஏனெனில், "ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது. அந்த வார்த்தை மாம்சமானது, அது தான் கிறிஸ்து." மேலும் இப்பொழுது வார்த்தையானது சரியாக மறுபடியும் திரும்பி, திரும்பவும் வெளிப்படுத்துகிறது, வரலாற்றில் இருக்கும் ஒருவரை அல்ல ஆனால் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை வெளிபடுத்திக் காட்டுகிறது. 106. ஓ தேவனே, இந்த காலை வேளையில், சபையானது அதை காணட்டும். ஆனால் அது வெளிப்பாடாயிருக்கிறது, வார்த்தை அதை ஜீவனுக்கு கொண்டு வருகிறது. வார்த்தைதாமே உயிர்தெழுந்த கர்த்தராகிய இயேசுவை வெளிப்படுத்திக் காட்டுகிறது. நாம் அனைவரும் ஒன்று சேரும் காலம் வரும் வரை, அவர் நம் மத்தியில் காத்துக் கொண்டிருக்கிறார், ஜெய முழக்கத்துடன் ஜெயத்தில் ஜெயவீரனாக அவரால் நம்மை ஆயிர வருட ஆரசாட்சிக்குள் நடத்தி செல்ல முடியும். 107. ஓ தேவனே, கரங்களை உயர்த்தியவர்களை ஆசீர்வதியும். அவர்கள் ஒரு முழுமையான, அர்பணிக்கப்பட்ட, பரிசுத்தமாக்கப்பட்ட, பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட தேவனுக்கென்று பிரதிஷ்டை பண்ணப்பட்ட இரத்தத்தால் கழுவப்பட்ட அந்த இனிமையான ஜீவியத்தை வாஞ்சிக்கிறார்கள். அதற்காக அவர்கள் ஏங்குகிறார்கள். இப்பொழுது அவர்கள் காத்திருக்கிறார்கள். நீரும், வேறு வழியில் அல்ல ஆனால் பரிசுத்த ஆவியாய் கீழே இறங்கி வருவீராக, அவர்கள் இங்கிருந்து வெளியே செல்லும் போது, அவர்களிடமாக ஒட்டியிருந்த அந்த காரியங்கள் எல்லாம் போய்விட்டது என்பதை அவர்கள் அறியட்டும்; அவை செத்தவைகளாய் பின்னாக விடப்பட்டிருக்கட்டும். இந்த காலை வேளையில், தாழ்மையான, இனிமையான, அன்பான கிறிஸ்தவர்களாய் விசுவாசத்தோடு, விசுவாசிக்கிறவர்களாய் வெளியே செல்லட்டும். உமக்காக அவர்கள் மிகவும் அர்ப்பணிக்கப்பட்டவர்களாய் ஜீவிக்கட்டும்; அவர்களுடைய ஜீவிதத்தின் முடிவில், அவர்கள் மரணத்தை விட்டு நீங்கலாகி ஜீவனுக்குட்பட்டிருக்கிறார்கள் என்றும், கிறிஸ்துவை அவருடைய உயிர்த்தெழுந்த வல்லமையில், ஏனெனில், அவரை வெறும் ஒரு எழுத்தாகவோ, அல்லது ஒரு வார்த்தையாகவோ, அல்லது ஒரு சுழற்சியாகவோ அல்லது ஒரு காலமாகவோ மட்டும் அல்ல; ஆனால் அவரை நிகழ் காலத்தில் (present tense), ஜீவிக்கிறவராய், அவர்களுடைய ஜீவியத்தில் ஜீவிக்கும் உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவாய் அறி ந்திருக்கிறோம் என்கிற இந்த உறுதியோடு அவர்கள் உம்மிடம் வரட்டும்.கர்த்தாவே, அதை அருளும். அதை நாங்கள் அவருடைய நாமத்தில், அவருடைய மகிமைக்காக கேட்கிறோம். ஆமென். மரித்துக் கொண்டிருந்த கள்ளன் அந்த ஊற்றை பார்த்து பூரித்தான் (என்னை பற்றி என்ன?) ...... நாளில் (நீங்கள் அதினால் பூரிக்கிறீர்களா?) நானும் அவனைப் போல் தீயவனாயிருந்த போதிலும் என் பாவங்கள் அனைத்தையும் கழுவும். என் பாவங்கள் அனைத்தையும் கழுவும்... (அவர் எப்பொழுது அதை செய்தார்? ஒருவேளை இப்பொழுதான்) அவர் எல்லாவற்றையும் கழுவினார்... (ஆம், நான் அவரிடம் அறிக்கையிட்டேன், அதற்காக நான் ஏங்கினேன் என்று அவரிடம் கூறினேன்)." அப்பொழுது அவர் அதை கழுவுகிறார்) வெளியே; நானும் அவனைப் போல் தீயவனாயிருந்த போதிலும், என் எல்லா பாவங்களையும் கழுவும். 108. அவர் அதிசயமானவரல்லவா? உங்களுடைய ஆத்துமாவில் நீங்கள் உண்மையான சுத்தத்தை உணருகிறீர்களா. உணருகிறீர்களா. எல்லா நியாயத்தீர்ப்புகளும்... அதை எத்தனை பேர் உணருகிறீர்கள், உங்கள் பக்கத்தல் அமர்ந்திருப்பவருக்கு சாட்சிக்கூற உங்களுடைய கரத்தை உயர்த்த விரும்புகிறீர்களா. "எல்லா பாவங்களும் போய்விட்டன. அவை எல்லாம் இப்பொழுது இரத்தத்திற்கு கீழாக இருக்கிறது. அதை பற்றி நான் மிகவும் நன்றாக உணருகிறேன். நான் கர்த்தராகிய இயேசுவை விசுவாசித்தேன்." உமது காயங்களிலிருந்து, பெருக்கெடுத்து வரும் இரத்த ஆற்றை; நான் விசுவாசத்தால் கண்டது முதல், (எதினால்?) விசுவாசத்தினால் நான் அந்த பெருக்கெடுத்து வரும் இரத்த ஆற்றை கண்டேன் மீட்கும் அன்பே என் பாடலாயுள்ளது, நான் மரிக்கும் வரைக்கும், அது அவ்வாறே இருக்கும். எல்லாம் சரி, இப்பொழுது எல்லாரும் ஒன்றாக. உமது காயங்களிலிருந்து, பெருக்கெடுத்து வரும் இரத்த ஆற்றை; நான் விசுவாசத்தால் கண்டது முதல் மீட்கும்... (பெயர்கள் அல்ல, காரியங்கள் அல்ல) ... என்னுடைய பாடலாயிருக்கிறது, நான் மரிக்கும் வரைக்கும் அது அவ்வாறே இருக்கும். நான் மரிக்கும் வரைக்கும் அது அவ்வாறே இருக்கும் நான் மரிக்கும் வரைக்கும் அது அவ்வாறே இருக்கும். மீட்கும் அன்பே என் பாடலாயிருக்கிறது. அது அவ்வாறே இருக்கும் வரை நான்... 109. (சகோதரியே, உங்களுக்கு விருப்பமானால், மெதுவாக) எது உங்களுடைய பாடலாய் (theme) இருக்கும்? "அந்நிய பாஷைகளா னாலும் ஓய்ந்துபோம். தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம். அறிவானாலும் ஒழிந்துபோம். நம்முடைய அறிவு குறைவுள்ளது. நாம் காண்பதும் குறைவுள்ளது. நாம் தீர்கதரிசனஞ் சொல்லுதலும் குறைவுள்ளது. ஆனால் நாம் முகமுகமாய் பார்க்கும்போது, அப் பொழுது நாம் அறியப்பட்டிருக்கிறபடியே. அறிந்துக்கொள்வோம். நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்; மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிற மனித ஆத்துமாவிற்குள் பரிபூரணமான, மீட்கும், கலப்படமில்லாத பரிசுத்த ஆவியின் அன்பு, 110. ஓ. நான் மிகவும் நன்றாக உணருகிறேன். நீங்கள் உணரவில் லையா? எத்தனை பேர் என்னோடுகூட ஒரு பழைய பாடலை பாட விரும்புகிறீர்கள்? நீங்கள் பாட விரும்புகிறீர்களா? பல வருடங்களுக்கு முன்பு சபையில் ஒன்றுமே இல்லாமல் வெறும் மரத்தூள் தரைமட்டும் இருந்தபோது நாம் வழக்கமாக பாடும் ஒன்று, ஒவ்வொருவரும் உள்ளே வந்து, அமருவோம். எதுவும் பேசாமல், ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த அளவுக்கு அமைதியாய், அமர்ந்து தியானிப்போம். பியானோ வாசிப்பவர் வருவார், நான் ஜெப அறையில் படித்துக்கொண்டிருப்பேன் அது இப்படியாக வரும். என் மீட்பர் மரித்த குருசண்டையில், பாவத்திலிருந்து சுத்திகரிக்கப்பட நான் அழுதேன். அங்கே என்னுடைய இருதயத்தில் அந்த இரத்தம் பூசப்பட்டது; அவருடைய நாமதிற்கே மகிமை! 111.உங்களுக்கு அந்த நாட்கள் நினைவிருக்கிறதா? பரிசுத்த ஆவியானவர் அந்த சாந்தத்தோடும் அன்போடும் கீழே இறங்கி வந்து பாவிகளை அவர்களுடைய பாவங்களை உணரசெய்வார், அவர்கள் சிலுவையண்டை வருவார்கள். நம்மில் ஒவ்வொருவரும். அதை இப்பொழுது பாடலாம். எத்தனை பேருக்கு அந்த பாடல் தெரியும்? சற்றே பழைய பாணியில், நாம் அதை இப்பொழுது பாடலாம். எல்லாம் சரி. என் மீட்பர் மரித்த குருசண்டையில், பாவத்திலிருந்து சுத்திகரிக்கப்பட நான் அழுதேன். அங்கே என்னுடைய இருதயத்தில் அந்த இரத்தம் பூசப்பட்டது; அவருடைய நாமத்திற்கே மகிமை! அவருடைய நாமத்திற்கே மகிமை! (அருமையான... அவருடைய அருமையான நாமத்திற்கே மகிமை! அங்கே என்னுடைய இருதயத்தில் அந்த இரத்தம் பூசப்பட்டது; அவருடைய நாமத்திற்கே மகிமை! நீங்கள் உங்களுடைய தலையை ஒரு நிமிடம் தாழ்த்துவீர்களா என்று வியக்கிறேன். நான் பாவத்திலிருந்து மிகவும் அதிசயமாக இரட்சிக்கப் பட்டிருக்கிறேன், (நீங்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்களா?) இயேசு மிகவும் இனிமையாக உட்புறத்தில் நிலைத்திருக்கிறார், அவர் என்னை உள்ளே அழைத்து சென்ற சிலுவையில்; (ஓ. என்னே!) மகிமை அவருடைய... இப்பொழுது உங்களுடைய தலைகளை தாழ்த்தி ஜெபியுங்கள். பின்பு, மகிமை அவருடைய... 112. நீங்கள் கடந்து சென்ற பல சோதனைகளில் அவர் உங்களுக்கு எவ்வளவு நல்லவராயிருந்தார் என்று சிந்தித்துப்பாருங்கள். சிறு பிள்ளை வியாதியாய் இருந்தபோது, தேவன் அதை சுகப்படுத்தினார். நீங்கள் மருத்துவமனையில் படுத்திருக்கையில், உங்களுக்கான மயக்க மருந்து (ether) ஆயத்தமாயிருந்தபோது, என்ன நிகழ்ந்தது? உங்களை யார் காப்பற்றியது? "நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்". நீ அந்த அறைக்குள் செல்லும்போது நீ என்ன கூறினாய் என்று நினைவிருக்கிறதா? உனக்கு மாரடைப்பு... ஏற்பட்டது என்று நீ நினைத்த அந்த இரவு நினைவிருக்கிறதா? ஓ தேவனே! அவர் என்ன செய்தார்? அவருடைய அருமையான நாமத்திற்கே மகிமை! அவருடைய அருமையான நாமத்திற்கே மகிமை! அவர் என்னை உள்ளே அழைத்து சென்ற சிலுவையில், (உன் வார்த்தையின் படியே உன்னை அழைத்துசென்றார்) அவருடைய நாமத்திற்கே மகிமை! 113.இப்பொழுது நாம் அதை வாய்திறவாமல் மெதுவாக பாடுவோம் (Hum). உங்களுக்கு அருகில் அமர்ந்திருக்கும் நபரிடம் உங்கள் கையை நீட்டி, அவரின் கையை பிடித்து, "சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நான் ஒரு கிறஸ்தவனாய் இருப்பதால் நான் மகிழ்கிறேன். நீங்கள் மகிழவில்லையா?" என்று கூறுங்கள். உங்களுக்கு பக்கத்தில் அமர்ந்திருப்பவரோடு கைக்குலுக்குங்கள். அவர் என்னை உள்ளே அழைத்து சென்ற சிலுவையில்; அவருடைய நாமதிற்கே மகிமை! 114.நான்-நான் இவ்வாறு உணர்வது எனக்கு பிரியம். இதுபோன்று தேவனை அமைதியாக ஆராதிப்பதை நான் நேசிக்கிறேன். அதற்கு ஏதோவொரு உண்மையான அர்த்தம் இருக்கிறது. ஏதோவொன்று அருகில் இருக்கிறது என்பதை உணர்வது! என்ன நடந்தது? பீட அழைப்பின் போது, அந்த பாவிகள் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட போது, தூதர்கள் தங்கள் இருக்கைகளிலிருந்து எழுந்து விட்டனர். பாருங்கள், அதுதான் உங்களை இந்த விதத்தில் உணர செய்கிறது. சகோதரன் ஹிக்கர்சன், நீங்கள் அதை விசுவாசிக்கி றீர்களா? ஓ, மகிமை... ஆத்துமா தேவனை ஆராதிக்கும்போது, இதுதான் ஆராதனை. வார்த்தையானது முன்னேறி சென்றிருக்கிறது, பாருங்கள். பரிசுத்த ஆவியானவர் இப்பொழுது ஆசீர்வதித்து, தண்ணீர் பாய்ச்சி கொண்டிருக்கிறார். அருமையான நாமம்! அங்கே என்னுடைய இருதயத்தில் இரத்தம் பூசப்பட்டது; அவருடைய நாமத்திற்கு மகிமை! 115.எங்கள் பரலோக பிதாவே, அழகான, தெய்வீக பரிசுத்த ஆவியின் பிரசன்னம் இப்பொழுது இங்கே நின்று தம்முடைய பிள்ளைகளை ஆசீர்வதிக்கையில், பல சமயங்களில் அவர் அவர்களை சிட்சிக்க வேண்டியிருக்கிறது, "ஏனெனில் தேவனிடத்தில் வரும் ஒவ்வொரு மகனும், முதலாவதாக சிட்சிக்கப்பட்டு சோதிக்கப்படவேண்டும், பிள்ளைகளுக்கான பயிற்சியையும், கடிந்து கொள்ளுதலையும் பெறவேண்டும்," ஒவ்வொருவருமே; யாரும் விதிவிலக்கல்ல. ஆனால் நம்முடைய பிதாவின் சிட்சையை நாம் சகித்தோமானால், அப்பொழுது அது நிகழ்காலத்தில் இன்பமான கனியை விளையச்செய்யும். தேவனே, ஒவ்வொரு பிள்ளையும் அதை அறியும்படி நீர் செய்ய வேண்டுமென்று, நான் ஜெபிக்கிறேன். ஓடிப்போவதற்காக அல்ல, சற்றே ஒருவித புரிந்து கொள்ளுதலுக்காக, ஆனால் இது தான் அவர்களுக்கான உம்முடைய ஆசீர்வாதம் என்பதை அவர்கள் அறிந்துக் கொள்ளட்டும். சுவிசேஷத்தின் உத்தமமான பால், அவர்களுடைய ஆத்துமாவில் ஊற்றிகொண்டிருக்கிறது, கானான் தேசத்திலிருந்து ஓடிவரும் பாலும் தேனும், விசுவாசத்தில் அவர்களுடைய உயிராற்றலை தூண்டி எழுப்பும் புது திராட்சை இரசம் (new wine); ஆராதிக்கும் இருதயங்கள் உமக்கு முன்பாக தாழ்த்தப்பட்டிருக்கிறது, கரங்களை உயர்த்தியபடி, கன்னங்களில் கண்ணீர் வழிந்தோட, அமைதியாக, பயபக்தியாக ஆராதிக்கிறார்கள். 116.ஓ தேவனே, நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன்! கர்த்தாவே, உம்மை நான் அவ்வளவாக நேசிக்கிறேன்! என்னால் கூடுமானால், நன்றி கூறுவதின் மூலமாக, என்னுடைய உணர்வை நான் உமக்கு வெளிப்படுத்த விரும்புகிறேன், என்னுடைய இருதயத்திலிருக்கும் அன்பையும் மதிப்பையும், அதாவது உம்மை நான் நேசிக்கிறேன், மதிக்கிறேன், நீர் நிகரே இல்லாதவர். உம்மை நான் நேசிக்கிறேன். பல நேரங்களில், மிக பெரிய சோதனைகளில், விமானமானது காற்றில் தலைகீழாக இப்படியும் அப்படியும் சுற்றியபடி விழுவதை பார்க்கையில்; நான் இருந்த இடத்தை நோக்கி சுழன்று கொண்டே வந்தது; ஒரு நிமிடத்தில் மரணத்தில் மூழ்கபோகிறேன் என்பதை அறிந்தவனாய், ஆனால் ஒரு சிறிய ஜெபம், விமானம் நேர்கோட்டில் சென்றது. அங்கே சூனியக்காரர்களுக்கும் பேய்களுக்கும் முன்பாக நிற்கையில், அவர்கள் சவால் விட்டு முன்னேறி நடந்துவந்தார்கள்; ஆனால் ஒரு சிறிய ஜெபம், அவர்களை நிற்கவைத்து, கைகால் விழும்படி செய்தது. ஜெபம் செய்யும்போது, எப்படியாய் பிசாசுகள் கூச்சலிட்டுக் கொண்டு உம்முடைய பிள்ளைகளிலிருந்து வெளியே வரும். ஓ கர்த்தாவே, அது உம்முடைய அன்பு! சிறு பிள்ளைகள், வியாதியாய், "அப்பா, எனக்காக ஜெபிப்பீர்களா?" என்று வந்து கூறுவதை பார்க்கையில், நீர் ஜூரத்தை நிற்கும்படி செய்து, ஒரு தாய் அதை தன் மார்போடு அமைதிப்படுத்துவது போல, பிள்ளையை அமைதிப்படுத்துவதை பார்த்திருக்கிறேன். எப்படியாய் உமக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்! ஒருவேளை தொல்லைகள் வந்துக் தூரத்தில் கொண்டிருக்கலாம். நாங்கள் அறிந்திருக்கிறோம், இருக்கும் அந்த மரணத்தின் சூறாவளி அலைகளை நாங்கள் நோக்கி பார்க்கையில், பழைய ஏற்பாட்டில் தாவீது கூறியது போல, "நான் பொல்லாப்புக்கு பயப்படேன், நீர் என்னோடு கூட இருக்கிறீர்". ஆத்துமாக்கள் உம்மிடம் வருவதை; உம்முடைய பிரசன்னத்தின் உறுதிப்படுத்துதலுக்காக, கைகால் பின்னினவர்களும், வேதனைப்படுகிறவர்களும், குருடர்களும், செவிடர்களும், மற்றும் ஊமையர்களும் சுகமாவதை பார்க்கையில், உமக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். உம்மை நாங்கள் நேசிக்கிறோம் உம்மை நாங்கள் மதிக்கிறோம். 117.நாங்கள் காத்திருக்கையில் இப்பொழுது இந்த சிறிய ஜனக் கூட்டத்தை ஆசீர்வதியும். உம்மிடம் வரும் ஒவ்வொரு ஆத்துமா விற்காகவும் நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். நீர் அவர்களை அதிக அதிகமாக தாராளமாக இன்றைக்கு ஆசீர்வதிப்பீராக. மேலும், இன்றிலிருந்து, அவர்களுடைய எல்லா சோதனைகளும் தொல்லைகளும் முடிந்து போவதாக; அவர்களுக்கும் தேவனுக்கும் இடையே நடக்கும் யுத்தமானது இப்பொழுதே முடிந்து போவதாக, மேலும் தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே நடக்கும் யுத்தத்தை எடுத்துப்போடும்படி, மனிதனை தேவனோடு மறுபடியும் ஒப்புரவாக்க, அவர் தன்னுடைய குமாரனையே அளித்தார் என்பதை அறிந்தவர்களாய், அவருடைய குமாரனின் இரத்தத்தின் மூலமாக அவர்கள் தேவனோடு ஒப்புரவாகட்டும், ஒருமுறை அவன் தேவனுக்கு பகைஞனாய் இருந்தான், ஆனால் இப்பொழுதோ அவன் அருகாமையில் கொண்டு வரப்பட்டிருக்கிறான், மேலும் தேவன் அவர்களை குமாரரும் குமாரத்திகளுமாக ஏற்றுக்கொண்டார். இப்பொழுது இதற்குமேல் அவர்கள் சத்துருக்களோ அந்நியர்களோ கிடையாது, ஆனால் அவர்கள் அன்பார்ந்த பிள்ளைகளா யிருக்கிறார்கள். அவர்கள் அதை அடையாளங்கண்டு கொள்ளும்படி நீர் செய்ய வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். சத்ருவானவன் அதை அவர்களுடைய இருதயத்திலிருந்து எடுத்துபோட அனுமதியாதேயும். ஆனால் அவர், நீர் அவர்களுடைய இருதயத்தை தட்டினீர் என்றும், அவர்கள் அதை ஏற்றுக் கொண்டு, தங்களுடைய கரங்களை உயர்த்தினார்கள் என்பதை அவர்கள் அடையாளங் கண்டுகொள்ளட்டும். கர்த்தாவே, அவ்வளவுதான். அவர்கள் அதை அடையாளங்கண்டுகொண்டு, உம்மை எப்பொழுதும் நேசிக்கவும் மேலும் சக மனிதர்களையும் நேசிக்க வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம். இதை நாங்கள் கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். பகலும் இரவும் நம்மை சுற்றி பிரகாசிக்கிற, இயேசுவே, உலகத்தின் ஒளி. நாம் இந்த ஒளியில் நடப்போம், அது ஒரு அழகான ஒளி, இரக்கத்தின் பனித்துளிகள் பிரகசாமயிருக்கும் இடத்திலிருந்து அது வருகிறது; பகலும் இரவும் நம்மை சுற்றி பிரகாசிக்கிற, யேசுவே, உலகத்தின் ஒளி. விசுவாசத்தின் பரிசுத்தவான்களே, நீங்கள் வந்து இயேசுவே உலகத்தின் ஒளி என்று பறைசாற்றுங்கள்; அப்பொழுது பரலோகத்தின் மணிகள் ஒலிக்கும், இயேசுவே, ஒளி... நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? இப்பொழுது நாம் பாடலாம், பாடலாமா? நாம் இந்த ஒளியில் நடப்போம், அது ஒரு அழகான ஒளி, இரக்கத்தின் பனித்துளிகள் பிரகாசமாயிருக்கும் இடத்திலிருந்து அது வருகிறது; பகலும் இரவும் நம்மை சுற்றி பிரகாசிக்கிற, ஓ. இயேசுவே, உலகத்தின் ஒளி. 118.நான் எழுப்புதலினால் இப்பொழுது நிரம்பி இருக்கிறேன் என்று நான் நினைக்கிறேன். ஓ, நாம் அதை மறுபடியும் பாடலாம். நீங்களும் பாடுவீர்களா? நாம் நம்முடைய கண்களை மூடி, கரங்களை உயர்த்தலாம். கனடாவிலிருந்து (Canada), நீங்கள் எங்கிருந்து வந்திருந்தாலும்; இங்கிருக்கும் இந்த சிறு கூட்டம் தேசத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருக்கிறார்கள். இப்பொழுது நாம் அதை பாடுவோம், நம்முடைய கண்களை மூடி, நம்முடைய கரங்களை உயர்த்தலாம். நாம் இந்த ஒளியில் நடப்போம், அது ஒரு அழகான ஒளி, இரக்கத்தின் பனித்துளிகள் பிரகசாமயிருக்கும் இடத்திலிருந்து அது வருகிறது; நம்மை சுற்றி பகலில்... (ஓ தேவனே!) இயேசுவே, உலகத்தின் ஒளி. 119.(ஒரு நிமிடம், அதை வாசியுங்கள், சகோதரியே). பழைய ஏற்பாட்டில், இஸ்ரவேல் பிள்ளைகளை வழிநடத்திய அந்த அக்கினி ஸ்தம்பம் அவர்தான். அந்த உடன்படிக்கையின் தூதன், அது கிறிஸ்துவாயிருந்தது. அதை அறிந்த எல்லாரும், "ஆமென்" என்று கூறுங்கள். (சபையார் "ஆமென்" என்று கூறுகின்றனர்). 120.பாவத்தை நீக்க, நம்மை மீண்டுமாக தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாக்கும்படி, புதிய ஏற்பாட்டில், அவர் தம்மைத் தாமே மாம்சத்தில் வெளிப்படுத்தினார், 121.ஒரு நாள், சாலையில், ஒரு சிறிய பழைய முரட்டு யூதன் சென்றுக்கொண்டிருந்தான், அழுதபடியே, தேவனை துதித்துக் கொண்டு, தீர்க்கதரிசனம் உரைத்துக்கொண்டிருந்த அந்த ஜனங்களை கைது செய்ய சென்றுக்கொண்டிருந்தான். அவனை சந்தித்தது எது? ஒரு அழகிய ஒளி. இப்பொழுது இயேசு எந்த சரீரத்தில் இருக்கிறார்? ஒரு ஒளியாக, அவர் ஆதியில் இருந்த அதே அக்கினி ஸ்தம்பமாக இருக்கிறார். அவர் தர்ஷீசை சேர்ந்த சவுலை சந்தித்தார், அந்த ஒளி அவனை குருடாக்கும் அளவிற்கு அவனுக்கு மிக அருகாமையில், அவனுடைய கண்களுக்குள்ளாக வந்து, "ஏன் என்னை துன்பப்படுத்துகிறாய்?" என்றது. "ஆண்டவரே, நீர் யார்?" என்றான். "நான் இயேசு" என்றார். 122.இன்றைக்கும், அவர் இங்கே இருக்கிறார், அவர் நம்மோடு இருக்கிறார். அவருடைய படத்தை கூட நாம் வைத்திருக்கிறோம். அவர் இனிமையானவரல்லவா? "அவர் நேற்றும், இன்றும் என்றும் மாறாதவறாயிருக்கிறார்." அப்படியானால் நாம் என்ன செய்வோம்? நாம் இந்த ஒளியில் நடப்போம்... அவர் தம்முடைய வார்த்தையை வெளிப்படுத்துகிறார். அவர் உயிரோடிருக்கிறார். அழகான ஒளி, பனித்துளிகளில் இருந்து வருகிறது... ஜெபம் செய்துகொள்ள விரும்பும் வியாதியஸ்தர்கள் இப்பொழுது பீடத்தின் அருகில் வரலாம். பகலும் இரவும் நம்மை சுற்றி பிரகாசிக்கிற, இயேசுவே, உலகத்தின் ஒளி ... மகத்தான வைத்தியர் என்ற பாடலை நீங்கள் வாசிக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். 123.ஏதோவொன்று என் நினைவிற்கு வருகிறது. ஒருமுறை ஒரு ஆராதனையில் எனக்கு நினைவிருக்கிறது, நான் வியாதியஸ்தர் களுக்காக ஜெபித்துக்கொண்டிருந்தேன். அங்கே ஒரு சீமாட்டி ஒரு சிறிய கைகால் பின்னியிருந்த ஒரு சிறு பெண் பிள்ளையை மேடைக்கு அழைத்து வந்தாள். பரிசுத்த ஆவியானவர் அங்கே இருந்தார். அவர்கள்... இப்பொழுது, இன்னும் பத்து நிமிடங்களில் நாம் முடித்து விடலாம். அவர்கள் ஒரு சிறிய கைகால் பின்னியிருந்த பெண் பிள்ளையை அழைத்துவந்தனர், அவளுக்கு ஒரு-ஒரு சிறிது போலியோ, அது பக்கவாதம் என்று அவர்கள் கூறினர், சிறுபிள்ளைகளை பாதிக்கும் பக்கவாதம். அவளுடைய சிறிய கால்கள் மேலே இழுத்தபடி இருந்தன, அவளால் நடக்க முடியவில்லை. இந்த சுகமளித்தல் ஆராதனையை எங்கே நடத்தினேன் என்று உங்களுக்கு தெரியுமா? விச்சித்திரமாக தோன்றினா லும், அது ஒரு டன்கார்ட் (Dunkard) (ஸ்தாபனத்தின் பெயர்-ஆசி) கூட்டத்தில், டன்கர்டில் நடந்தது, பெந்தேகொஸ்தேவில் அல்ல, டன்கார்டில். நான் அங்கே இருந்தது யாருக்குமே தெரியாது, எந்த சபைக்கும் தெரியாது. கர்த்தர் என்னை அங்கே வழிநடத்தி சென்றார். அவர்களுக்கு ஆவியின் ஞானஸ்நானத்தை பற்றி ஒன்றுமே தெரியாது. பூமியில் பரலோகம் என்று கூறலாம், அன்பானது தன்னுடைய இடத்தை எடுத்துகொண்டது, இப்பொழுது எடுத்து கொண்டது போலவே. "இப்பொழுது நாம் ஜெப வரிசையை ஆரம்பிக்கலாம்" என்று நான் கூறினேன். "ஜெப அட்டைகளோடு இருக்கும் நீங்கள் எல்லாரும்" என்று கூறினேன், ஒரு குறிப்பிட்ட எண்ணிலிருந்து ஆரம்பித்து, "என்னுடைய வலது பக்கத்தில் நில்லுங்கள்". அவர்கள் அவர்களை வரிசைப் படுத்தினார்கள். சரியாக இரண்டாவது நபராக, ஒரு சிறிய கைகால் பின்னிய குழந்தையை, ஒரு சிறு பெண் பிள்ளையை ஒரு சீமாட்டி வைத்திருந்தாள். பரிசுத்த ஆவியானவர் அதை பற்றி பேச ஆரம்பித்தார். மேலும் பியானோ வாசிக்கும் சீமாட்டி, வாசித்தாள்: மகத்தான வைத்தியர் இப்பொழுது அருகில் இருக்கிறார், இறங்குகிற இயேசு; சோர்வான இருதயம் மகிழும்படி அவர் பேசுகிறார், இயேசுவை தவிர வேறு நாமம் இல்லை. 124.அவள் அந்த தந்தத்தினால் செய்யப்பட்ட பியானோ கட்டைகளை வாசிக்கையில். நான் தயாரித்து வைத்திருந்த எண்ணெயை ஒரு சிறிய குடுவையில் என்னுடைய பாக்கெட்டில் வைத்திருந்தேன். அது ஒலிவ மரத்திலிருந்து வரும் ஒலிவ எண்ணெய். அந்த இரவில், நான் சென்று வியாதியஸ்தர்களுக்காக ஜெபித்தேன், ஆவிக்குள்ளாகி அழ ஆரம்பித்தேன், என்னுடைய முகத்தில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது. என்னிடம் இந்த எண்ணெய் இருந்தது, இந்த எண்ணெயில் நான் பார்த்தேன்... கண்ணீரானது இந்த எண்ணெயின் மீது தெரித்துக் கொண்டிருந்தது. நான் சென்று வேறு மூன்று பொருட்களை எடுத்து வந்து... அதினோடு கலந் தேன். அதை எடுத்து அந்த சிறு பெண்ணின் மீது பூசினேன். நான் என்னுடைய கரத்தை அவள் மீது வைத்தேன். "பரலோக பிதாவே, நீரே அந்த மகத்தான வைத்தியர், இதோ நீர் இங்கே இருக்கிறீர்" என்று நான் கூறினேன். அந்த சிறு பெண் என்னை பார்த்து, நெளிந்து, என்னுடைய கரத்திலிருந்து தரையிலே குதித்து, தரை முழுவதும் ஓடினாள். அவளின் தாயார் மயங்கி விழுந்தாள்; டன்கார்டை சேர்ந்தவள். பியானோ வாசித்த சீமாட்டி சுற்றும் முற்றும் பார்த்து, அப்படியே உண்மையாக வெளுத்துபோய், சற்றே நிலைகுலைந்தாள். மேலும் அந்த பியானோவானது தொடர்ந்து வாசித்துக்கொண்டே இருந்தது: மகத்தான வைத்தியர் இப்பொழுது அருகில் இருக்கிறார், இறங்குகிற இயேசு; சோர்வான இருதயம் மகிழும்படி அவர் பேசுகிறார், இயேசுவை தவிர வேறு நாமம் இல்லை. 125 ஒரு சிறு டன்கார்ட் பெண் அங்கே அமர்ந்திருந்தாள். அவள் மூச்சி விட திணறியதை நான் கவனித்தேன். அவள் ஒருபோதும் பெந்தேகொஸ்தேவை பற்றி கேள்விபட்டதே இல்லை. அழகிய சிறு பிள்ளை, நீளமான வெள்ளை முடியோடு, பொன்னிறத்தில், நன்கு சீவப்பட்டிருந்தது. அவர்கள் எப்படி உடை அணிவார்கள் என்று உங்களுக்கு தெரியுமா, சிறு வெள்ளை தொப்பியை அவர்கள் அணிந்திருப்பார்கள். அது அவளின் தலையிலிருந்து விழுந்தது. அவள் தன்னுடைய கையை உயர்த்தி பாட ஆரம்பித்தாள். அவள் என்ன பாடிக்கொண்டிருந்தாள் என்றே அவளுக்கு தெரியவில்லை, அவள் அவ்வளவாக ஆவிக்குள்ளா யிருந்தாள். 126.மேலும் அந்த முழு சபையும், ஒரே இசைவாக, பீடத்தண்டை அழுதபடியே வந்து கர்த்தராகிய இயேசுவை ஏற்றுக்கொண்டனர். மேலும் பரிசுத்த ஆவியானவர், அன்போடு, ஒவ்வொருவருக்கும் ஞானஸ்நானம் கொடுத்தார். அவர்கள் எப்படியாய் தேம்பி அழு தார்கள், சரி செய்துகொண்டார்கள், மேலும் ஒருவருக்கொருவர் கைக்குலுக்கினார்கள், இதெல்லாம் நடந்தது. அதுதான் பெந்தேகொஸ்தே. 127.அதே மாறாத இயேசு இங்கே இருக்கிறார். இப்பொழுது முயற்சிக்க வேண்டாம்... பாருங்கள், நீங்கள் உங்கள் சிந்தையை வேறு ஏதோவொன்றின் மேல் வைத்து, ஒருவேளை இதுவா அல்லது "நான் ஒருமுறை முயற்சி செய்கிறேன்". "சரி" என்று நீங்கள் யோசிக்க முயற்சிக்கிறீர்கள், "இதோடு அது முடிந்தது!" என்று உங்கள் மனதில் நீங்கள் தீர்மானிக்கும் வரை, நீங்கள் உங்களுடைய இருக்கைக்கு திரும்பி செல்லலாம். அந்த தீர்மானத்தை நீங்கள் செய்யும்போது, அது முடிந்துவிடும். அதை செய்யாத வரை, அது அங்கேதான் இருக்கும். 128.இப்பொழுது நீங்கள் விரும்பினால், உங்களால் முடிந்த வரை பீடத்தண்டை நெருங்கி வந்து இடங்களை நிரப்புங்கள். எனக்கு உதவி செய்யும்படி சகோதரன் நெவிலை கேட்கப்போகிறேன். அபிஷேகிக்கும் எண்ணெய் இங்கிருக்கிறது; நான் கைகளை வைக்கும்போது, அவர்கள் ஒவ்வொருவர் மீதும் சகோதரன் நெவில் எண்ணெய் பூச வேண்டுமென்று நான் விரும்புகிறேன். இப்பொழுது நீங்கள் அதை உண்மையாக விசுவாசித்தால், இதோடு அது முடிந்தது! உங்கள் முழு இருதயத்தோடும் உண்மையாக விசுவாசியுங்கள். இப்பொழுது நாம் மிகவும் மிருதுவாக பாடலாம், நாம் அனைவரும் ஒன்றாக, மகத்தான வைத்தியர் என்கிற பாடலை நாம் பாடும்போது, மகத்தான வைத்தியர் இப்பொழுது அருகில் இருக்கிறார்; மனதுருக்கமுள்ள இயேசு அவரே; சோர்வான இருதயம் மகிழும்படி அவர் பேசுகிறார், ஓ, இயேசுவின் சத்தத்தை கேளுங்கள். சேராபீன்கள் பாட்டில் இனிமையான இராகம் அழிவுள்ள மனிதனின் நாவில் இனிமையான நாமம், பாடப்பட்டிதிலேயே இனிமையான பாடல், இயேசு, ஸ்தோதரிக்கப்பட்ட இயேசு. இப்பொழுது உங்கள் தலைகளை தாழ்த்தியிருக்கையிலே. பரலோகத்திற்கு போகிற உங்கள் வழியிலே சமாதானத்தோடு செல்லுங்கள், அந்த நாமத்தை... சுமந்துகொண்டு 129.எங்கள் பரலோக பிதாவே, "விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்" என்று வார்த்தை கூறுகிறது "மேலும் எலியாவும் எங்களை போல பாடுள்ள மனிதனாய் இருந்தான்". தேவனே, நாங்கள் சுவிசேஷத்தை ஜனங்களுக்கு மிகவும் சிக்கலாக்காமல் அதாவது அவர்கள் அது தேவனுடையது என்று எண்ணாமல் மனிதனுடையது என்று எண்ணும்படி செய்யும் குற்றத்தை நாங்கள் ஒருபோதும், ஒரு போதுமே செய்யாமலிருப்போமாக. இப்பொழுது நாங்கள் எளிமையாக விதிமுறையை பின்பற்ற போகிறோம். இந்த பாடல்களாலும் கீர்த்தனைகளாலும், நாங்கள் ஒருவரோடொருவர் ஒரு ஆசீர்வதிக்கப் பட்ட ஐக்கியத்திற்குள் சென்றிருக்கிறோம். ஆகவே, நமக்கு ஒரு பிரதான ஆசாரியர் இருக்கிறார், அவரும் நம்மோடு அதனுள் வந்திருக்கிறார், நம்முடைய பலவீனங்களின் உணர்வுகளை கொண்டு அவரை தொட முடியும். தேவையுள்ளவர்களாய், பலர் இந்த பீடத்தண்டையிலே நின்றிருக்கின்றார்கள். உம்முடைய அன்பான, உம்முடைய கனத்திற்குரிய ஊழியக்காரர், என் சகோதரன் நெவிலை அனுப்புகிறேன், ஒரு கனத்திற்குரிய மனிதன், ஒரு நீதிமான்; எலியாவை போல, எலியாவை போலவும், நம் எல்லாரையும் போல பாடுள்ள மனிதன். அவரை முன்னே அனுப்புகிறேன். 130.நீர் கூறியிருக்கிறீர், "அவர்களுக்கு அவர்கள் எண்ணெய் பூசி, அவர்களுக்காக ஜெபிக்கும்படி" அவர்களுக்கு, அந்த சரீரத்திற்கு, "விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்". இங்கிருக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்காகவும், கர்த்தாவே, என் முழு இருதயத்தோடும் நான் ஜெபிக்கிறேன். அவர்களுடைய தேவையை நீர் அறிந்திருக்கிறீர். நீர் அவர்களை சுகமாக்கும்படி நான் ஜெபிக்கிறேன். இப்பொழுது, உலகத்தோற்றத்திற்கு முன்பே ஏற்படுத்தப்பட்டதை தேவன் பரிசுத்த ஆவியின் ஏவுதலினால் யாக்கோபுக்கு கொடுத்தார், அவன் அதை சபைக்கு எழுதினான். 131.இயேசு, போகும்போது, கூறினார், "வியாதியஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்". 132. எண்ணெய் பூசும்படி, பரிசுத்த அவியின் மூலமாக யாக்கோபு கொடுத்த கட்டளையின்படி அந்த வேலையை செய்ய என் சகோதரனை நான் அனுப்புகையில்; அவர்கள் மீது கைகளை வைக்க, கர்த்தராகிய இயேசு கொடுத்த கட்டளையின்படி பரிசுத்த ஆவியானவர் கொடுத்த கட்டளையின்படி நாங்களும் பின்னாக வருகிறோம். அவர்கள் சொஸ்தமாவார்கள். 133.இப்பொழுது, கர்த்தாவே, என் முழு இருதயத்தோடும். இந்த காலை வேளையில் பல ஜனங்கள் என்னோடு சேர்ந்திருக்கிறார்கள், என் முழு பெலத்தோடும். என் முழு வல்லமையோடும், விசுவாசமுள்ள ஜெபத்தை நான் ஜெபிக்கிறேன், இங்கே நின்று கொண்டிருக்கும் ஒவ்வொரு நபருக்காகவும், அவர்களுடைய சிந்தையில் எந்த சந்தேகமும் இல்லாமல், ஆனால் தேவனுடைய கட்டளை அவர்களுக்கு அருளப்பட்டது என்ற ஒரு நிச்சயமான பரிபூரணமான நம்பிக்கையுடன் அவர்கள் தங்கள் இருக்கைக்கு திரும்புவார்கள் என்பதால் கேட்கிறேன் மேலும் அவர்களுடைய சுகமளித்தலில் அவருடைய வார்த்தை நிச்சயமாக வெளிப்படும். இந்த ஆசீர்வாதங்கள் அவர்களுக்கு வேண்டுமென ஜெபிக்கி றேன், இயேசு கிறிஸ்துவின் நாமத்தால். ஆமென். 134.இப்பொழுது ஒவ்வொருவரும்... [ஒலிநாடாவில் காலியிடம். ஜெபவரிசை ஒரு நிமிடம் மற்றும் முப்பத்தி ஒரு வினாடிகளுக்கு நடைபெறுகிறது, சகோதரன் பிரன்ஹாமின் வார்த்தைகளை பகுத்தறியமுடியாதவை - ஆசி]..?..[ஒலிநாடாவில் காலியிடம்]. 135.ஒரு சிறு பெண்பிள்ளைக்காக நான் ஜெபித்து அவளை பற்றி, அவளுடைய தலையின் மீதும் முகத்தின் மீதும் ஒட்டியிருந்த அந்த பெரிய கட்டி பற்றியும் அது எப்படியாய் கீழே விழும் என்றும் சுகமாவாள் என்றும் தீர்க்கதரிசனம் உரைத்தேன். இதோ அந்த சிறிய பெண், அவளின் முகத்தின் மீதும் மற்ற இடங்களில் இருந்தும் அது முழுவதுமாக மிச்சமில்லாமல் சென்றுவிட்டது தேவனுடைய மகிமைக்காக மேலும் அது முழுவதுமாக காய்ந்து விட்டது, அசறு மட்டுமே இருக்கிறது என்பதை காண்பிக்க அந்த தாயார் அழைத்து வந்திருக்கிறாள். சகோதரியே, இயேசு ஒருமுறை கூறினார், "ஒன்பது பேர் சுகமாகவில்லையா?" ஒருவன் மட்டுமே வந்து மகிமைப்படுத்துகிறான், பாருங்கள். அதற் காக தேவனுக்கு நன்றி கூறுங்கள். இப்பொழுது, தேனே, அங்கு தலைமுடி திரும்பவும் வளர்ந்துவிடும். சகோதரன் பிரன்ஹாம் அதை எப்படி உனக்கு அந்த இரவில் கூறினார் என்பதை நினைவில்கொள், நீ பரிபூரண சுகத்தோடு, சாதாரணமாக இருப்பாய். தேவனுக்கு நன்றி கூற நாம் தாழ்த்தலாம். 136.இப்பொழுது, பிதாவே, உம்முடைய சுகமளித்தளுக்காக உமக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். இயேசு இன்னும் ஜீவித்து ஆட்சி செய்கிறார் என்று காண்பிக்கும்படி வர விரும்பிய அந்த உத்தமமான தாய்க்காகவும் மற்றும் அந்த இனிமையான பெண் பிள்ளைக்காகவும் நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். அந்த பெரிய, புற்றுநோய் போன்ற பார்ப்பதற்கு அசிங்கமானது, அவளின் தலை முழுவதுமாக மற்றும் பக்கவாட்டிலும் உப்பி யபடி இருந்ததை பார்ப்பதற்கு. மேலும் நீர் அவளை சுகமாக்கி அதை எடுத்துப்போட்டீர். அதற்காக நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். உற்சாகமான இருதயத்துடன் இருக்கும் அந்த உத்த மமான தாயாரை நீர் ஆசீர்வதிக்கும்படி நாங்கள் ஜெபிக்கிறோம். இந்த சிறிய பெண் ஒரு சீமாட்டியாகும்போது, உம்முடைய துதியை தொடர்ந்து சாட்சிப்பகரட்டும். 137.இப்பொழுது சகோதரனும் நானும் எண்ணெய் பூசும்போது, நான் தொடர்ந்து வியாதியஸ்தர் மேல் கைகளை வைக்கிறேன். இந்த சிறு பெண் பெற்றுக்கொண்ட அதேவிதமான ஆசீர்வாதத்தை அவர்களும் பெறட்டும். ஒரு சிறுபிள்ளை விசுவாசத்தை போல அவர்களால் விசுவாசிக்க மட்டும் முடிந்தால், இந்த பிள்ளை விசுவாசித்தது போல், அது அப்படியே நடக்கும். [ஒலிநாடாவில் காலியிடம் -ஆசி]. 138.மிகவும் நன்றாயிருக்கிறது. கர்த்தராகிய இயேசுவின் இரத்தம் நம்மை நம்முடைய எல்லா பாவங்களிலிருந்தும் சுத்தமாக்குகிற வேளையில், நாம் ஆராதனையின் நேரத்தில் இருப்பதால் மேலும் ஒருவரோடொருவர் ஒன்றாக இந்த ஐக்கியத்தின் நேரத்தில் இருப்பதால் இந்த காலை வேளையில் நான் மிகவும் மகிழ்கிறேன். மேலும் நான்.. 130.எங்களுடைய வாசல்களில் அன்னியராயிருப்பவர்களே, உங்களை திரும்பி வரும்படி நாங்கள் வரவேற்கிறோம். இன்றிரவு, சாயங்காலத்தில் நடக்கும் ஆராதனைக்கு வாருங்கள். நீங்கள் இந்த நகரத்திலிருந்து, திரும்பி வந்து இன்றிரவு எங்களோடு இருக்க விரும்பினால், நான் மிகவும் மகிழ்வேன். கதவு எப்பொழுதுமே திறந்திருக்கிறது. எங்களிடம் எந்த ஸ்தாபனமும் இல்லை, எந்த கோட்பாடுமில்லை... கிறிஸ்து மட்டுமே, எந்த சட்டமுமில்லை ஆனால் அன்பு மட்டுமே, எந்த புஸ்தகமும் இல்லை ஆனால் வேதாகமம் மட்டுமே. நாங்கள் உங்களை எதிர்பார்க்கிறோம், உங்களை வரவேற்கிறோம். நீங்கள் அன்புடன் அழைக்கப் படுகிறீர்கள். 140.மேலும் இதையும் நான் கேட்கிறேன், நீங்கள் உங்கள் பயணத்தில் செல்லும்போது, நீங்கள் எங்கள் நகரத்தை விட்டு, நாட்டின் பல்வேறு இடங்களுக்கு செல்லும்போது, கிறிஸ்துவுக்குள் உங்கள் உடன் ஊழியக்காரனாக என்னை உங்களுடைய ஜெபத்திலும் மற்றும் அன்பிலும் பரிசுத்த ஆவியின் ஐக்கியத்திலும் என்னை நினைவுக் கூறுங்கள். இப்பொழுது கெனடாவிற்கும் மற்றும் கலிபோர்னியாவிற்கும் செல்வதற்காக நான் சீக்கிரமாக கிளம்ப வேண்டும். வெளிப்படையாக, நான் கலிபோர்னியாவிற்கு இடம்பெயர போகிறேன். ஆகையால் எனவே நீங்கள் எனக்காக ஜெபத்தில் இருக்கும்படி நான் - நான் விரும்புகிறேன், அதிகமாக ஜெபத்தில் இருக்கும்படி, இப்பொழுது உடனடியாக என்னிடம் இருக்கும் ஒன்றிற்காக நான் தீர்மானம் எடுக்க வேண்டும், பாருங்கள், அது மிகவும் சவாலானது, நீங்கள் என்னை உங்கள் இருதயத்தில் வைத்து நினைவுக்கூரும்படி நான் - நான் - நான் வேண்டுகிறேன். ஏனெனில், ஜெபம்தான் காரியங்களை மாற்றுகிறது என்பதை நான் அறிவேன். ஜெபம்தான் நமக்கான காரியங்களை செய்கிறது. 141.மேலும் இப்பொழுது, இன்றைக்கு, இவ்வளவு நேரம் உங்களை பிடித்து வைத்திருந்ததற்காக நான் - நான் வருந்துகிறேன், மேலும் நம்முடைய அருமையான சகோதரன், இங்கிருக்கும் பாஸ்டரை, அவருடைய பிரசங்கப்பீடத்திலிருந்து விளக்கி வைத்திருந்த தற்காகவும். நான் மிகவும் வருந்துகிறேன், ஆனால் ஒருவேளை எனக்கு தெரியவில்லை... நான் உடனே கிளம்ப வேண்டும். மேஜையின் மீது எந்தவொரு சிறிய நேர்காணலுக்காக எதுவும் வைக்கப்படவில்லை. ஆனால் பாஸ்டர் தேடிக்கொண்டிருக்கையில்... இங்கிலாந்திலிருந்து ஒரு சகோதரன் வந்திருக்கிறார், என்னை சிறிது நிமிடங்கள் பாரக்கவேண்டும் என்று கூறினார் நான் அந்த சகோதரனை பார்க்கவேண்டும். உங்கள் எல்லாரையும் பார்த்து கைகளை குலுக்க எனக்கு நேரம் இருந்தால் நன்றாயிருக்கும் என்று விரும்புகிறேன், ஆனால் எனக்கு நேரமில்லை இப்பொழுது, இந்த காலை வேளைகளில் நான் இங்கிருக்கும் போது ஒரு - ஒரு சிறு நேர்காணல் வேண்டுமானால், இங்கு அமர்ந்திருக்கும் என் செயலாளர் (secretary), சகோதரன் காக்சை அழையுங்கள், அவர்தான் அதுபோன்ற காரியங்களை ஏற்படுத்தி தருகிறார். அந்த காரணத்தால்தான் எங்களுடைய நேரத்தை நாங்கள் - நாங்கள் திட்டமிடவேண்டும், ஆகையால் நேர்காணல் போன்றவைகளை அனுமதிக்க முடியும். ஆனால் இந்த சகோதரன் அதை அறியாமல் இங்கிலாந்திலிருந்து வந்திருக்கிறார். அடுத்த பன்னிரண்டு நிமிடத்தில் நான் இங்கிருந்து கிளம்பியிருக்க வேண்டும், ஆகவே நான் - நான், ஆம், பன்னிரெண்டு மணிக்கு, எனவே நான் - நான் துரிதப்பட்டு செல்லவேண்டும். ஆகவே நீங்கள் எல்லாரும் என்னை மன்னியுங்கள், இந்த சகோதரனோடு சிறிது நிமிட நேர்காணலுக்காக நான் அறைக்குள்ளே செல்கிறேன். நான் திரும்பி வந்தவுடன் உங்கள் அனைவரையும் சீக்கிரமாக சந்திக்கிறேன். எனக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள். 142.இப்பொழுது வியாழன் இரவு, ஆராதனைகள் பிலேடல்பியா சபையில் இருக்கும். வருகின்ற அடுத்த வாரம், புதன்கிழமை இரவன்று நாங்கள் அவைக்கூடும் மண்டபத்தில் (Convention Hall) இருப்போம். (ஐயா, உமக்கு நன்றி). சர்வதேச அளவில், முழு சுவி சேஷ கிறிஸ்தவ புருஷர்கள் ஐக்கியத்தில் நாங்கள் இருப்போம் - இருப்போம். இருபத்தி மூன்று அன்று இரவு... பகலில் நான் பேசப்போகிறேன், லியாமி... விடுதி, மினியாபோலிஸ், மின்னி சோட்டாவில். அதன்பின் அவைக்கூடும் மண்டபத்தில், என்று நான் நினைக்கிறேன், அடுத்த இரவில், அது சனிக்கிழமையில். மேலும் ஞாயிரன்று, சங்கை. கார்டன் பீட்ர்சன்னுடன் ஹார்ட்ஸ் ஹார்பர் (Hearts Harbor Tabernacle) கூடாரத்தில் இருக்கிறேன், அது பிரசங்க ஆராதனை. மேலும் திங்கள் இரவு, திங்கள் முழுவதும், ஐந்து நாட்களுக்கு அவைக்கூட்டம் (convention). 143.அதன் பிறகு வடக்கு கெனடாவில், ஒரு பெண்ணிற்கு கொண்டு செல்லும்படி கர்த்தர் உரைக்கிறதாவது என்னிடம் இருக்கிறது. நான் வடக்கு நோக்கி செல்கிறேன், மனைவியும், பிள்ளைகளும் கொஞ்ச காலத்திற்கு என்னோடு வருகிறார்கள். நான் திரும்பவும் தெற்குப்பக்கமாக, என் நண்பர், எர்ன் பாக்ஸ்டரை சந்திக்க வருகிறேன். வான்கூவரில் அவரிடம் சொல்வதற்கு என்னிடம் சில காரியங்கள் இருக்கிறது. அது முடிந்தவுடனே, நான் வாஷிங்டனிற்கு, திரு. ராஸ்மூஸனிடம், அவரோடு கூட அங்கே ஒரு நாள் பார்வையிட செல்கிறேன். 144.அதன்பிறகு நான் லா கிரெசன்டா, கலிபோர்னியாவிற்கு செல்கிறேன், சில காரியங்களை ஒழுங்குப்படுத்துவதற்காக, அதாவது, என்னுடைய கூடாரம் ஏற்கனவே ஆயத்தம் செய்யப்பட்டு, இப்பொழுது களத்திற்கு செல்ல தயாராயிருக்கிறது. எனவே, நல்லது, கர்த்தருக்கு சித்தமானால் வருகின்ற இந்த குளிர் காலத்தில், அநேகமாக நான் கலிபோர்னியாவின் மேற்கு கடற்கரையிலிருந்து ஆரம்பித்து, கலிபோர்னியா முழுவதும் மற்றும் அரிசோனா முழுவதும் செல்கிறேன்; கூட்டங்களுக்கு இடையில் ஒரு ஆராதனைக்காக மீண்டுமாக ஆப்பிரிக்காவிற்கு செல்லும் நேரத்தை தவிர்த்து. ஆப்பிரிக்காவிலிருந்து இங்கு வந்திருக்கும் டேவிட் டுப்பிலேசிஸ் மற்றும் பல மனிதர்கள், இந்த கூட்டத்தில் என்னோடிருக்கிறார்கள், அவர்கள் ஆப்பிரிக்கா கூட்டத்தை நடத்த விரும்புகின்றனர். அங்கே சந்திக்க போகிறோம், நாங்கள் சகோதரன் ஆர்கன்பிரைட்டுடன் சேர்ந்து ஜெபிக்க போகிறோம். அடுத்த கூட்டம் எங்கே நடக்கும் என்பதை பார்க்கும்படிக்கு. 145.நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? [சபையார் "ஆமென்" என்று கூறுகின்றனர் - ஆசி]. எல்லாம் சரி. நீங்கள் அவரை நேசித்தால், பின்பு நீங்கள் என்னையும் நேசிக்க வேண்டும், ஏனெனில் நான் அவரில் இருக்கிறேன். நாம் ஒருவரை ஒருவர் நேசிக்கிறோம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. நம்முடைய அருமை சகோதரன் நெவில், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சகோதரன் நெவில் அவர்களே, இந்த நேரத்திற்காக நன்றி. 2